Tagged: மாவீரர் நினைவேந்தல்

மாவீரர் நாள் கொளத்தூர் 2016 – காணொளிகள்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி ரோய் நினைவிடமும், தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடமும் அமைந்துள்ள புலியூர் பகுதியில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு 27-11-2016 அன்று முன்னால் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யூ டியூப் வீடியோ லிங்க் மாவீரர் நாள் 2016 நிகழ்வு https://www.youtube.com/watch?v=chwrDdNQ8wg கொளத்தூர் மணி உரை https://www.youtube.com/watch?v=Y93bnQUde6A விடுதலை ராசேந்திரன் உரை https://www.youtube.com/watch?v=HrjlY09zLUc சுப்புலட்சுமி ஜெகதீசன் உரை https://www.youtube.com/watch?v=tF_n1Nv5gNE

மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி 27112015

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்ச்சி மன்னார்குடி நடைபெற்றது. மன்னார்குடி நவ 27 இளமை சுகங்களை எல்லாம் துறந்து விட்டு, எதிர்கால சந்ததிகளுக்காக தம் நிகழ்காலத்தைப் பணயம் வைத்துப் போராடி தம் இன்னுயிரை ஈகம் செய்தோர் பல்லாயிரக்கணக்கானோர். ஆண், பெண் என்கிற பாலின வேறுபாடின்றி, ஏழை, பணக்காரன் என்கிற பொருளிய வேறுபாடுகளின்றி, உயர்சாதி ரூ கீழ்சாதி என்கிற சமூக வேறுபாடுகளின்றி, தரைப்படை, வான்படை, கடற்படை, தற்கொலைபடை என உலகின் எந்த நாட்டு விடுதலைப்படைக்கும் இல்லாத தனிச்சிறப்புகளுடன் களம் கண்டு மாண்ட அம்மாவீரர்கள் நினைவைப்போற்றும் நாளே நவம்பர் 27. 1982ஆம் ஆண்டு நவம்பர் 27 அன்று பிரபாகரனின் மடியில் தலைவைத்தபடியே உயிர்விட்ட சங்கர் என்கிற சத்தியநாதன் முதற்களப்பலியான அம்மாவீரனின் மறைந்த நாளே (நவம்பர் 27) மாவீரர் நாள். அந்நாளில் இலட்சியத்துக்குத் தன்னையே ஈந்தரூநாட்டு விடுதலைக்கு உயிரை கொடுக்க முன்வந்த – தமிழ்மக்களின் நல்வாழ்வுக்காக வாழ்வை இழந்த மாவீரர்களுக்கும், தமிழ் பொதுமக்களுக்கும் மரியாதை செலுத்திட உலகம்...