Tagged: மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்

கழகத் தலைவர் தலைமையில் விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் 21052017

21.05.2017 மாலை 3 மணிக்கு விழுப்புரம் (மா) தி.வி.க மாவட்ட கலந்தாய்வு கூட்டம் சங்கராபுரம் வாசவி மஹாலில் நடைபெற்றது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தோழர்கள் க.ராமர், பெரியார் வெங்கட், கா.மதி, ந.வெற்றிவேல், இளையரசன், சி.சாமிதுரை, தீனா( புதுச்சேரி), ந.அய்யனார் (த.செ.கு) உரையாற்றினர். கழகத் தலைவர் சிறப்புரையாற்றினார். மா.குமார் நன்றி உரையாற்றினர். கூட்டத்தில் கழக இதழ்கள் ‘பெரியார் புரட்சி  முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தா சேர்த்தல் மற்றும் கழகத்தின் அடுத்தகட்ட செயல் பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு, விழுப்புரம் மாவட்டம் கிழக்கு, மேற்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். விழுப்புரம் கிழக்கு (மா) பொறுப் பாளர்கள்: இளையரசன் (மாவட்டத் தலைவர்), தினேஷ் (மா.செ), ஸ்ரீதர் (மா.அ), அழகு முருகன் (மா.து.த), பெரியார் ஜெயரக்சன் (மா.து.செ), விழுப்புரம் மேற்கு மாவட்டம், க. மதியழகன் (மா.த), க.ராமர் (மா.செ), சி.சாமிதுரை (மா.அ), ம.குப்புசாமி (மா.து.செ), மு.நாகராஜ் (த.அ.ம. மாவட்ட அமைப்பாளர்), வீ.வினோத் (த.மா.க. மாவட்ட அமைப்பாளர்),...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26062016

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16,ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் தோழர்.கமலக்கண்ணன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. தோழர்.எழிலன் தலைமை வகித்தார். தோழர்.இரத்தினசாமி, தோழர்.சண்முகப்பிரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. 89 வயதான மூத்த பெரியார் தொண்டர்.தோழர்.இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.. சித்தோடு தோழர் பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது.. *கூட்டத்தில் கீழ்க்காண் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:* *1)*திராவிடர் விடுதலைக் கழக மாநில செயற்குழு முடிவின் படி, பரப்புரைப் பயணமானது *சென்னை,மயிலாடுதுறை,பொள்ளாச்சி,சத்தியமங்கலம்* ஆகிய இடங்களில் இருந்து ஆகஸ்ட்-7ஆம் தேதி தொடங்கி,கழகம் தொடங்கப்பட்ட நாளான ஆகஸ்ட்-12 அன்று, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிறைவடைகிறது. இப்பயணத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்திலிருந்து தோழர்கள் கலந்து கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. *2)* சத்தியமங்கலத்திலிருந்து தொடங்கும் பயணம் ஈரோடு வழியாக வரும் போது, மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.. *3)* பெரியார் முழக்கம் இதழுக்கான...