Tagged: மாணவர் எழுச்சி
தலையங்கம் இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு...
மாணவர் எழுச்சிக்கு அரணாய் சென்னை திவிக
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் அரணாய், அமர்க்களமாய் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் …. எதிரி பீட்டா ( PETA) அல்ல … அந்த போர்வைக்கு பின்னே ஒளிந்திருக்கும் இந்துத்துவாவே ( RSS) என்பதை முழக்கங்கள் மூலமாகவும், பதாகைகள் மூலமாகவும், வீதி நாடகங்கள் மூலமாகவும் மாணவர்களின் கவனத்திற்கு கொண்டுச் சென்றோம். மாணவர்களும் தெளிவாக பொது எதிரியை கண்டுக்கொண்டு பாஜக மோடி அரசையும், ( RSS) ஆர் எஸ் எஸ் யையும் கண்டித்து முழக்கங்களால் விண்ணை அதிர வைத்தனர். சென்னையிலுள்ள தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக சென்னை மாவட்டசெயலாளர் தோழர் இரா. உமாபதி தலைமயில் திவிக மாணவர் அமைப்பு சென்னை மாவட்ட செயலாளர் தோழர் பிரகாசு முன்னிலையில் போராட்டத்தில் கலந்துக் கொண்டு போராட்டத்தை சிறப்பித்தனர் . தோழர் பிரபாகரன் பிணமாக நடித்திட , திவிக தோழர்கள் உடலுரிமை இயக்க தோழர் இரன்யாவின் தலைமையில் ஒப்பாரி வடிவில் தமிழகத்தின் நசுக்கப்படும் உரிமைகளை...