கவிஞர் சுகிர்தா ராணி கவிதை தொகுப்பு – மாட்டுக்கறி
மாட்டுக்கறியே என் வாழ்க்கை மாட்டுக்கறியே என் கொண்டாட்டம் மாட்டுக்கறியே என் திருவிழா மாட்டுக்கறியே என் வாழ்வு மாட்டுக்கறியே என் உணவு நான் பிறந்து கண்விழித்தபோது உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே எனக்கு முதல் சுவாசம். கைகால்களை உதைத்து உதைத்து நான் வீறிட்டு அழுதபோது என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில் செருகியிருந்த எலும்புத் துண்டுகளே எனக்குக் கிலுகிலுப்பை. பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறே எனக்குத் தாய்ப்பால். கறியின்மீது கவிழ்ந்திருக்கும் மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து பனியென உருகும் ஊன்நெய்யில் சுட்டு எடுப்பதே என் பலகாரம். மாட்டுக்கறித் துண்டுகளை நீளவாக்கில் அரிந்தெடுத்து வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட முட்செடியின் நெருங்கிய கிளைகளில் பரப்பிவைத்து உலர்த்துகையில் கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே எனக்குப் பொழுதுபோக்கு. களிமண்ணால் தேய்த்துக் குளித்து ஆடையணிந்து வெளிச்செல்கையில் என்மீது வீசும் புலால் நாற்றமே எனக்கு நறுமணத் தைலம். . வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பு இறக்கத்தில்...