Tagged: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்

தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் மின்னஞ்சல் முகவரி !

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையர் அவர்கள் வருகிற விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக மொத்தமாக ஒரு இடத்தில் தடைசெய்யப்பட்ட ரசாயண பூச்சு பூசப்பட்ட,பிளாஸ்ட் ஆப் பாரிசால் செய்யப்பட்ட, சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை விநியோகிக்கும் பொருட்டு வைத்திருந்தால் அந்த இடம் குறித்த சரியான தகவலை அளிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறு அனுப்பப்படும் தகவல்களின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். எனவே கழக தோழர்கள் அம்மாதிரியான தடைசெய்யப்பட்ட சிலைகளை மொத்தமாக வைத்திருக்கும் இடங்களை அறிந்து மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்திற்கு மின்னஞ்சல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாசுக்கட்டுப்பாட்டுவாரியத்தின் மின்னஞ்சல் முகவரி : Tnpcbmd3@vsnl.com Anpcb_chn@gov.in  

கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு ! விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை மனு

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு கடிதங்கள் கொடுக்கப்பட உள்ளதை அறிவோம். அவ்விண்ணப்பங்களை தயாரிப்பதற்கான மாதிரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை தோழர்கள் தங்கள் பகுதிற்கேற்ப மாற்றியமைத்து அந்தந்த அலுவலங்களில் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கோட்டாட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் ஆகியவற்றிலும் மேலும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்து அறநிலையத் துறை ஆகியவற்றிலும் கடிதங்கள் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வை பதிவு செய்து கழக தலைமைக்கு செய்தியாக அனுப்பவும். அந்தந்த பகுதி நாளிதழ்களில் இச்செய்தியை இடம் பெற செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும். சிலை கரைப்பு குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்...