Tagged: மயிலாடுதுறை

கழக சார்பில் புதிய மாத இதழ் : புத்தக சந்தை ரூ.2 கோடி கட்டமைப்பு நிதி திரட்ட இலக்கு கழக தலைமைக்குழு முக்கிய முடிவுகள்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கடந்த நவம்பர் 13, ஞாயிறு பிற்பகல் 3 மணியளவில் மயிலாடு துறையில் ‘புத்தகச் சோலை’ அரங்கில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் உள்ளிட்ட தலைமைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இயக்கத்தின் வளர்ச்சி, கட்டமைப்பு, பெரியாரியலை முன்னெடுப்பதற்கான அணுகுமுறைகள், புதிய நூல்களை வெளியிடுதல், அதை மக்களிடம் விற்பனை செய்வதற்கான புத்தக சந்தைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டன. புதிய மாத இதழ் ஒன்றை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.  கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு கூடுதலாக உறுப்பினர்களை சேர்க்க திட்டமிடப்பட்டு அதற்கான பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பாளர்                             மாவட்டங்கள் இரா. உமாபதி           ...

பெரியார் ஏன் எதிர்க்கப்படுகிறார்? மயிலாடுதுறையில் கழகம் நடத்திய விளக்கக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 26.09.2015 சனிக் கிழமை அன்று பெரியார்: யாரால், எதற்க்காக, எதிர்க்கப் படுகிறார்? என்ற தலைப்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அமைப் பாளர் கு.செந்தில்குமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மத அடிப்படை வாதிகளும், ஜாதிய ஆதிக்கவாதிகளும்தான் பெரியாரை எதிர்க்கின்றனர் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இடஓதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் இன்றும் அவர்கள் முழுமையாக அதில் பலன் பெற முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்ப்படுத்தி இட ஒதுக் கீட்டை ஒழிக்கும் சதி திட்டமிட்டு நடைபெறுவதாக விடுதலை இராசேந்திரன் கூறினார். எழுத்தாளர் மதிமாறன் பேசும்போது திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்ட மன்னர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் புராணங்களை கதாகாலேட்சபம் செய்து கொண்டிருந்த வேளையில் பெரியார் தான் திருக்குறள் மாநாடு...