Tagged: மமக

நீண்டகால முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

மனித நேய மக்கள் கட்சி சார்பில் நேற்று 07.02.2016 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசே அரசியலமைச்சட்டம் 161 அய் பயன்படுத்து ! 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அபுதாஹீர் உள்ளிட்ட முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய் ! பேரறிவாளன் உள்ளிட்ட வாழ்நாள் சிறைவாசிகளை விடுதலை செய் ! என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஹைதர் அலி அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி, மக்கள் கண்காணிப்பகம் தோழர் ஹென்றி டிபேன், தோழர் எவிடன்ஸ் கதிர், தமிழ் தேச மக்கள் கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் தோழர் புகழேந்தி, சி.பி.அய்( எம்.எல்) மக்கள் விடுதலை தலைவர் தோழர் அருண்சோரி ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர் மம