ஜாதி ஒழிப்பு கற்பனை வாதம் அல்ல – ஜெயராணியுடன் நேர்காணல்
(மஞ்சள் நாடகத்துக்கு உரையாடல்களை எழுதிய ஜெயராணி நாடகம் உருவானதன் பின்னணி ஜாதி ஒழிப்புக்கான இயக்கத்தின் தேவையை விளக்கி“நிமிர்வோம்” இதழுக்கு அளித்த பேட்டி) ஒரு எழுத்தாளரான நீங்கள் ஜெய்பீம் மன்றம் என்ற ஓர் அமைப்பைக் கட்டமைக்க வேண்டிய சூழல் எவ்வாறு ஏற்பட்டது? முதலில் ஒரு விஷயத்தை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஓர் அமைப்பையோ இயக்கத் தையோ உருவாக்க வேண்டுமென்பது எனது எதிர்கால செயல்திட்டங்களில் ஒன்றாகக் கூட இருக்கவில்லை. எழுத்தாளர் என்று சொல்வது கூட பரந்துபட்ட அடையாளம். பத்திரிகையாளர் என்ற அடையாளமே எனக்கு சரியானதாக இருக்கும். நான் எழுத வந்த 18 ஆண்டுகளில் ஒரு செய்தியாளராக எத்தனையோ அமைப்புகளோடு பயணப்பட்டிருக்கிறேன். போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என அப்போதெல்லாம் சிறிய பெரிய அளவுகளில் என்ன செயல்பாடுகள் நடந்தாலும் என்னுடைய எஸ். எல். ஆர் கேமராவோடு என்னை பார்க்க முடியும். என் சக பத்திரிகையாளர்கள், தோழிகள் வெவ்வேறு அமைப்புகளோடு இணைந்திருந்த காலகட்டம் அது. ஆனாலும் எனக்கு எந்த அமைப்பிலும்...