Tagged: பெரியார் முழக்கம் 30012014 இதழ்

125 ஆவது பிறந்த நாள் நினைவாக சரித்திரம் படைத்த சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

125 ஆவது பிறந்த நாள் நினைவாக சரித்திரம் படைத்த சர். ஏ.டி. பன்னீர்செல்வம்

சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர். பெரியாரின் நம்பிக்கைக்கு உரியவர். இந்தியா வுக்கான பிரிட்டிஷ் அமைச்சரின் செயலாளராக தேர்வு பெற்று லண்டன் பயணமானபோது தமிழ்நாடு விடுதலைக்கான முயற்சிகளைத் தொடங்கி விடுவார் என்ற எதிர்பார்ப்புடன் வழியனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், நடந்ததோ வேறு. சர். ஏ.டி. பன்னீர் செல்வத்தின் 125 ஆவது பிறந்த நாள் நினைவாக அவரது வரலாற்றுச் சுருக்கம் வெளியிடப்படுகிறது. சர். ஏ.டி. பன்னீர்செல்வம், அய்ம்பத்தி இரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து, தென்னகத்தின் அரசியல் வரலாற்றில் ஓர் உன்னதமான இடத்தைப் பெற்றவர். கடைசியாக இவருக்குக் கிடைத்த இந்தியா மந்திரியின் ஆலோசனையாளர் பதவியினை இவர் ஏற்றுத் தாயகம் திரும்பியிருப்பாரேயானால் தென்னகத்தின் – திராவிடத்தின் – தமிழகத்தின் அரசியலே வெகுவாக மாறியிருக்கும். ஆனால், என்ன செய்வது? இயற்கையும் தமிழர்க்குப் பகையாயிற்று. ஆம்! தமிழர்களை வஞ்சித்துவிட்டது! யார் – இந்த பன்னீர்செல்வம்? திருவாரூர் – நன்னிலம் பாதையில் செல்வபுரம் என்ற ஊர்,...

125 ஆவது பிறந்த நாள் நினைவாக (2)

125 ஆவது பிறந்த நாள் நினைவாக (2)

சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் கடலில் வீழ்ந்தது! 125 ஆவது பிறந்த நாள் நினைவாக சர். ஏ.டி. பன்னீர் செல்வம் குறித்த வாழ்க்கைக் குறிப்பின் கடந்த வாரத் தொடர்ச்சி. திருவையாறு கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டுமே கற்றுத் தரப்பட்டதை மாற்றி தமிழ்க் கற்பிக்கவும் ஏற்பாடு செய்த சர். செல்வத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு எதனையும் சர்.செல்வம் பொருட் படுத்தவில்லை. விடுதியிலும் தமிழ் படிப்பவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வழி வகைகள் செய்யப் பட்டன. ‘சமஸ்கிருத காலேஜ்’ எனும் பெயர் ‘ராஜாஸ் காலேஜ்‘ என்றும், ‘அரசர் கல்லூரி’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவளிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி சர். செல்வம் எல்லா வகுப்பினருக்கும் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தார். சர். செல்வம், மாவட்டக் கழகக் கல்வித் துறையை நன்றாக முடுக்கி...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

மனிதர்களைக் கொன்ற புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.    – செய்தி அப்பாடா! தமிழ்நாட்டில் உண்மையான ஒரு ‘என்கவுண்டர்’ இப்போதுதான் நடந்திருக்குது. தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கம்; தி.க. தலைவர் கி.வீரமணி சதி; அழகிரி தாக்கு. – செய்தி இது அபாண்டம்! உண்மையில் கி.வீரமணிக்கு இதில் தொடர்பிருந்தால் “அழகிரியுடன் – கழத்தினரோ, கழகக் குடும்பத்தினரோ எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்ற வாசகம் – அறிக்கையில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும்! காஞ்சி ஜெயேந்திரன், தில்லை நடராசன் கோயிலின் உள் பிரகாரத்துக்குள்ளே காரில் வந்து தரிசனம்; கோயில் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை.    – ‘தமிழ் இந்து’ செய்தி அடுத்த முறை தரிசனத்துக்கு ‘நட ராஜனையே’ காரில் ஏற்றி காஞ்சி புரத்திற்கு அனுப்புவாங்க பாருங்க! நிர்வாக அதிகாரம் முழுமை யாக தீட்சதர்களிடமே வந்துடுச்சே! போக்குவரத்துக்கு இடையூறு! சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு.        – செய்தி அதே இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி, அதில்...

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தலையங்கம்: தூக்குத் தண்டனை ஒழிப்பில் மேலும் ஒரு மைல் கல்!

தூக்குத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுதும் வலிமைப் பெற்றுவரும் சூழலில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு நம்பிக்கை ஒளியைத் தருகிறது. கருணை மனுவுக்கு விண்ணப்பித்து நீண்டகாலம் கிடப்பில் போடப்பட்டுக் கிடந்த 15 தூக்குத் தண்டனை கைதிகளின் தண்டனையை ரத்து செய்து, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மனித உரிமை வரலாற்றில் ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும். தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், சிவகீர்த்திசிங் ஆகியோரடங்கிய அமர்வு வழங்கியுள்ளஇந்த தீர்ப்பு, தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதில் நிலவிய குழப்பங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. வீரப்பனுக்கு உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருந்த சைமன், மாதையன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோர், இந்தத் தீர்ப்பின் வழியாக தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது ஆறுதலைத் தருகிறது. 8 ஆண்டுகள் 6 மாத சிறைவாசத்துக்குப் பிறகு, ‘தடா’ நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அத்தண்டயைக் குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்...

தமிழக அரசைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்: இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்காதே!

தமிழக அரசைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டங்கள்: இடஒதுக்கீட்டைப் புறக்கணிக்காதே!

‘தமிழக அரசே; இடஒதுக்கீட்டைப் புறந் தள்ளாதே!’ என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் ஜன.25 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றப் போவதாக அறிவித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா. அதற்கான மருத்துவர்கள் தேர்வுக்கான அரசு அறிவிப்பில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படாது என்று அறிவிக்கப்பட் டிருந்தது. மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதால் இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற முடியாது என்றும், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனையில் இடஒதுக்கீடு பின்பற்றுவதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்தார். எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி, இடஒதுக்கீட்டைப் பின்பற்றக் கோரியும் கழகம் ஆர்ப்பாட்டங்களில் வலியுறுத்தியது. தமிழ்நாட்டில் ஆசிரியர் காலியிடங்களுக்கான தேர்வில் மத்திய ஆசிரியர் தேர்வாணையம் நிர்ணயித்த தகுதி மதிப்பெண் அளவை தமிழக...