Tagged: பெரியார் முழக்கம் 13032014 இதழ்
நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கே வந்து விட்டதைப் போலவே தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் கருத்துகளைப் பரப்புகின்றன. ‘தேசத் தந்தை’யாகவே மோடி, மக்கள் மீது திணிக்கப்படுகிறார். முகமூடி தரித்துவரும் ‘இந்த கதாநாயகன்’ எப்படி நடிக்க வேண்டும்? எதைப் பேச வேண்டும்? உடை எப்படி அணிய வேண்டும்? மக்களை எப்படி ஏமாற்ற வேண்டும்? இதற்காகவே ஒரு சர்வதேச நிறுவனத்தை (யயீஉடி றுடிசடனறனைந) மாதம் ரூ.25,000 அமெரிக்க டாலர் செலத்தி, வாடகைக்கு எடுத்துள்ளார் மோடி. இதில் இடம் பெற்றுள்ள வெளி நாட்டு நிபுணர்கள் தான் ‘தேச பக்த’ மோடிக்கு மக்களை ஏமாற்றும் தந்திர நடவடிக்கைகளை உருவாக்கித் தருகிறார்கள். மோடியின் முகமூடியை அகற்றிப் பார்த்தால் உண்மை முகம் அம்பலமாகிவிடும். இந்தியாவை இந்துக்களின் நாடாக்கும் கொள்கைக்காக செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்று அரசியலுக்கு வந்தவர் மோடி. ‘இந்தியாவை இராணுவ மயமாக்கு; இராணுவத்தை இந்து மயமாக்கு’ என்பதே ஆர்.எஸ்.எஸ். அதன் துணை அமைப்புகளின் முழக்கம். இப்போது முன்னாள் இராணுவ தளபதிகள்...
இராஜஸ்தான், கருநாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் மனித உரிமை அமைபபுகள் சென்னையில் மார்ச் 8, 9 தேதிகளில் கூடி தூக்குத் தண்டனை ஒழிப்பு மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து விவாதித்து, இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் செயல் திட்டங்களை வகுத்தன. இந்திய அரசு மரணதண்டனை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் நம்பிக்கையுள்ள தேசிய மாநில கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் என்று கூட்டத்தின் முடிவில் வேண்டுகோள் விடப்பட்டது. கருணை மனு காலதாமதத்தின் அடிப்படையில் 15 தூக்குத் தண்டனை கைதிகளை உச்சநீதிமன்றம் விடுவித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனித உரிமைக் குழுக்கள் வரவேற்றன. இரண்டாம் நாள், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்; அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானம் குறித்து, பிரதிநிதிகள் விரிவாக விவாதித்தனர். தமிழர் பிரச்சினை என்ற...
இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மாந்தநேயத்துக்கு எதிரான குற்றங்களை தனக்குத் தானே இலங்கை அரசு விசாரிக்கும் நாடகத்துக்கு இம்முறையாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற சர்வதேச தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு ஏமாற்றமே பதிலாகக் கிடைத்துள்ளது. அய்.நா.வின் 25ஆவது மனித உரிமை மன்றத்தில் இங்கிலாந்து, மொரிசியசு, மான்டி நிக்ரோ, மாசிடோனியா நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா தாக்கல் செய்துள்ள வரைவு தீர்மானம், கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. தமிழர் பகுதிகளை இராணுவ மயமாக்கிவரும் இலங்கை அரசு, தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து, இராணுவத்தையும் சிங்கள மக்களையும் குடியேற்றி வருவதோடு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை செயல்பட முடியாத நிலைக்கு முடக்கி வைத்து விட்டது. மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதிலிருந்து அன்றாட சிவில் நிர்வாகம் வரை இராணுவம் கையில் எடுத்துக் கொண்டுவிட்டது. இந்த நிலையில் சர்வதேச நேரடிக் கண் காணிப்புக்கு உடனடியாக இலங்கை அரசு உட்படுத்தப்படா விட்டால், தமிழர் நில ஆக்கிரமிப்புகள் மேலும் தீவிரமாகிவிடும் என்ற நியாயமான அச்சம்...
ஈ.வெ.கி.எஸ். இளங்கோவன் அணியிலிருந்த மொடக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் ஆர்.எம். பழனிச்சாமி, அமைச்சர் சிதம்பரம் அணியில் சேர்ந்தார். – தினமலர் செய்தி இனி எதிர்காலத்தில் இளங்கோவன் அணி யுடன் கூட்டணியோ, தொகுதிப் பங்கீடோ கிடையாது என்று பேட்டி அளித்தாரா? தன்னை ஒரு டீக்கடைக்காரர் என்று கூறிக் கொள்ளும் மோடிக்கு, ஹெலிகாப்டரில் பயணம் செய்ய எங்கிருந்து பணம் வந்தது? – கெஜ்ரிவால் கேள்வி இது என்ன கேள்வி? ‘சாமான்யன்’ மோடிக்கு, ‘சாமான்யர்’ அம்பானி உதவிடக் கூடாதா? மனிதாபிமானம் இல்லாமல் பேசக் கூடாது. திருவனந்தபுரம் விரைவு ரயிலில் பயணம் செய்த முதியவரின் கையை எலி கடித்ததால் ரயில் ஈரோட்டில் 30 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டது. – செய்தி எல்லா இரயில்களிலும் எலிகளுக்காக நான்கு ஏ.சி. கோச்சுகளை தனியாக ஒதுக்கியிருந்தா, இந்தப் பிரச்சினை வந்திருக்காதுல்ல. ஒருபோதும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க முடியாது. – தா. பாண்டியன் ஆமாம்! விட்டுக் கொடுக்கவே கூடாது. அது சரி; நீங்கள்...
1936இல் லாகூரில் ஜாதி ஒழிப்பு சங்கம், ஜாதி குறித்து அம்பேத்கரை பேச அழைத்தது. கடுமையான உழைப்பில் அம்பேத்கர் தயாரித்த ஆழமான அந்த ஆய்வுரையில் பார்ப்பனர், இந்து மதம் தொடர்பான கருத்துகளை நீக்க வேண்டும் என்று சங்கத்தார் கூறியதை ஏற்காத அம்பேத்கர், உரை நிகழ்த்த மறுத்துவிட்டார். வரலாற்று சிறப்பு மிக்க அந்த உரையை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்ற தலைப்பில் சுயமரியாதை இயக்க பதிப்பாக வெளிவந்தது. பல நூறு பதிப்புகளைக் கண்ட அந்த ஆங்கில நூலை, அண்மையில் நவயாண பதிப்பகம் வெளியிட்டது. இதற்கு உலகப் புகழ் பெற்ற புக்கர் விருது பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், 200 பக்க அளவில் விரிவான முன்னுரை எழுதியுள்ளார். அரசியல் பொருளாதார ஊடகத் துறைகளில், தலித் மக்கள் புறக்கணிக்கப்படு வதற்கும், பார்ப்பன பனியா ஆதிக்கம் தொடர் வதற்கும் ஜாதியமைப்பே காரணம் என்கிறார் அருந்ததிராய். அவர் எழுதிய முன்னுரையி லிருந்து ஒரு...