Tagged: பெரியார் முழக்கம் 01052014 இதழ்

ஏது சாதி? முனைவர் ஆ. ஜீவானந்தம்

ஏது சாதி? முனைவர் ஆ. ஜீவானந்தம்

சங்ககாலப் பெருமையெல்லாம் என்னாச்சு-உன் சாதிச்சங்கச் சண்டையில் மண்ணாச்சு நீதிநேர்மை ஞாயமெல்லாம் போயாச்சு-இப்ப நீயாநானா போட்டியின்னு ஆயாச்சு. அம்பேத்கரு கொள்கையைத்தான் வித்தாச்சு-சனங்க அடிமாடுபோல இப்ப செத்தாச்சு பெரியாரு தந்தபுத்தி பித்தாச்சு-அவரு பேரத்தவிர மத்ததெல்லாம் சொத்தாச்சு! கார்ல்மார்க்சு மூலதனம் வீணாச்சு-நாடு கார்ப்பரேட்டுக் கம்பெனிக்கே தூணாச்சு இந்தியாவ ஆளுறதே நூலாச்சு-அதுக்கு இத்துப்போன மனுதருமம் கோலாச்சு! காதலைத்தான் சாதிவெறி பிச்சாச்சு-ஆனா கலப்புமணம் மனசுகளைத் தச்சாச்சு எங்களுக்கு தன்மானம் வந்தாச்சு-எங்க எதிரிகளோ பயந்துபோயி நொந்தாச்சு! காட்டிக்கொடுத்த பயலுகளாம் மேல்சாதி-ஆரியனக் கட்டோட எதுத்தவங்க கீழ்சாதி இருக்குறதோ ஆண்சாதி பெண்சாதி-இதுல எங்கிருக்கு என்சாதி உன்சாதி! பெரியார் முழக்கம் 01052014 இதழ்

திருமண மந்திரங்களின் ஆபாசம் – வேத பண்டிதர்களே – ஒப்புதல்!

திருமண மந்திரங்களின் ஆபாசம் – வேத பண்டிதர்களே – ஒப்புதல்!

புரோகித திருமணங்களில் பார்ப்பனர்கள் உச்சரிக்கும் சமஸ்கிருத மந்திரங்கள் இழிவும் ஆபாசமும் நிறைந்தவை என்பதை வேத விற்பன்னரான அக்னி ஹோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியாரே கூறி யிருக்கிறார். ராமானுஜ தாதாச்சாரி இறந்துபோன காஞ்சி சீனியர் சங்கராச்சாரியுடன் நெருக்கமாக இருந்தவர். இந்து மதம் எங்கே போகிறது? என்ற தலைப்பில் நக்கீரன் ஏட்டில் இவர் எழுதிய தொடர் வைதிக பார்ப்பனர்களை கதிகலங்க வைத்தது. தொடரை நிறுத்துமாறு பார்ப்பனர்களிடமிருந்து வந்த அழுத்தங்களை புறந்தள்ளிவிட்டு அவர் எழுதினார். திருமணங்களில் கூறப்படும் மந்திரங்கள் குறித்து அவர் எழுதிய பகுதியையும் அதே திருமண மந்திரங்கள் குறித்து கீழாத்தூர் சீனிவாசாச்சாரியார் எழுதி, லிட்டில் ப்ளவர் கம்பெனி வெளியிட்டுள்ள விவாஹ மந்த்ரார்த்த போதினி நூலிலிருந்தும் சில மந்த்ரங்களைத் தொகுத்துத் தந்துள்ளோம்: அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாதாச்சாரியாரின் “இந்து மதம் எங்கே போகிறது?” நூலிலிருந்து: திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் – ஒரு மந்திரத்தைப் பாருங்கள். “தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம்...

மதம் திணிக்கும் ‘பிறவி தொழிலாளர்’ – ‘பிறவி முதலாளிகள்’ பேதம் தகர்க்கப்பட வேண்டும்! – பெரியார்

மதம் திணிக்கும் ‘பிறவி தொழிலாளர்’ – ‘பிறவி முதலாளிகள்’ பேதம் தகர்க்கப்பட வேண்டும்! – பெரியார்

01.05.1935 ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்ற மே நாள் விழாக் கொண்டாட்டத்தில் தலைமையேற்று ஆற்றியவுரை. மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி விட்டார்கள். நான் முடிவுரை என்கின்ற முறையில் ஏதாவது பேச வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள். மே தினம் என்பது இன்று உலகமெங்கும் ஒவ்வொரு தேசங்களிலும் கொண்டாடப்படுவதானா லும் ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. ரஷ்யாவில் கொண்டாடப் படுவதுபோல் இங்கிலாந்தில் கொண்டாடப்பட மாட்டாது. ஸ்பெய்னில் கொண்டாடப்படுவது போல் பிரஞ்சில் கொண்டாடப்பட மாட்டாது. அதுபோலவே தான் மேல் நாடுகளில் ஐரோப்பா முதலிய இடங்களில் கொண்டாடப்படுவது போல் இந்தியாவில் கொண்டாடத்தக்க நிலைமை இல்லை. ஏனெனில் ஒவ்வொரு தேசத்தின் நிலைமை வெவ்வேறான தன்மையில் இருந்து வருகின்றது. எல்லா தேசமும் ஒரேவிதமான பக்குவத்தை அடைந்துவிடவில்லை. ஆரம்ப தசையில் இருக்கிற தேசமும் முடிவை எட்டிப் பார்க்கும் தேசமும் ஒரே மாதிரி கொண்டாட வேண்டும் என்று...

காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

காதலர்களைப் பிரித்து தற்கொலைக்குத் தூண்டிய வன்முறைக் கும்பல் மீது தாரமங்கலம் காவல்துறை நடவடிக்கைக் கோரி ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த தெசவிளக்கு கிராமம் லட்சுமாயூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் லாரி கிளீனராக இருக்கிறார். இவரது மனைவி மகேஸ்வரி ( 35). இவர்களது மகள் சுமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தாரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலாளர் விஸ்வநாதனின் மகனும், ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருபவருமான சந்தோஷ் என்ற சாமிநாதன் சுமதியை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரம் விஸ்வநாதன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் மாணவியின் வீட்டுக்கு சென்று வசதியான வீட்டு பிள்ளையை மயக்குகிறாயா என்று கேட்டுள்ளனர். இதனால் மாணவி சாமிநாதனுடன் பேசுவதை நிறுத்தி விட்டார். 22-04-2014 அன்று நள்ளிரவு 12 மணிக்கு மாணவி வீட்டுக்கு சென்ற சாமிநாதன் ஏன் என்னுடன் பேசுவதில்லையென கேட்டுள்ளார். தன்னுடன் பேசாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் மிரட்டியுள்ளார்....

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

7 தமிழர் விடுதலைக்கான உரிமைக் குரலை தொடர்ந்து முன்னெடுப்போம்!

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபோது கரைபுரண்ட உற்சாகம் – உச்சநீதிமன்றம் – இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதாக அறிவித்தபோது தலைகீழாக மாற்றி ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கு தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய 7 சட்டப் பிரச்சினைகளை முன் வைத்துள்ளது, தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு. சட்டங்களின் நுணுக்கங்கள் விவாதங்கள் எப்படி இருந்தாலும், ஒரு சாமான்யனின் பார்வையில் நீதி மறுக்கப்படுகிறது என்ற வேதனைதான் மிஞ்சுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்ட இவர்கள், 23 ஆண்டுகாலம் சிறையில் கழித்துவிட்டார்கள். மரண தண்டனையைக் குறைக்கக் கோரி கருணை மனு தாக்கல் செய்யப்பட்டு, அது 11 ஆண்டுகாலம் அது கிடப்பில் போடப்பட்டது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான உயிர் வாழும்...