Tagged: பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியார் நினைவு நாள்

24-12-2015 அன்று திருச்சி மாவாட்டம் மணப்பாறை பகுதியில் தந்தை பெரியார் 42வது நினைவு நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மூத்த பெரியார் தொண்டர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெரியார் பெருந் தொண்டர் சேகர் முன்னிலை வகுத்தார். கழகத் தோழர்கள் ஆசிரியர் தியாகுசுந்தரம், மகராஜா, சி.இரா. ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தங்கராசு, மகராஜா, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனபால் சிறப்பாக சுவரொட்டிகள் ஒட்டி நிகழ்வினை ஒருங்கினைத்திருந்தார். பகுதியில் புதியதாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்தமைக்காக மூத்த பெரியாரியல் தோழர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தந்தை பெரியாரின் 42ஆவது நினைவு நாள் அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைக்கும் இராயபேட்டை, மந்தைவெளியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. களப்பணியாற்றிய போது விபத்தில் உயிர் நீத்த கழகச்...

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தூத்துக்குடியில் பெரியார் நினைவு நாள்

தந்தை பெரியாரின் 42வது நினைவு நாளில் தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தென்பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி பொறுப்பாளர் சூரங்குடி பிரபாகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவிசங்கர், மாவட்ட பொருளாளர் வீர பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் பால சுப்பிரமணியன், தோழர்கள் குமார், செல்லத்துரை, பிரபாகரன், சந்திரசேகர் மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 14012016 இதழ்