தந்தை பெரியார் நினைவு நாள்

24-12-2015 அன்று திருச்சி மாவாட்டம் மணப்பாறை பகுதியில் தந்தை பெரியார் 42வது நினைவு நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்விற்கு மூத்த பெரியார் தொண்டர் பெருமாள் தலைமை தாங்கினார். தொடர்ந்து பெரியார் பெருந் தொண்டர் சேகர் முன்னிலை வகுத்தார். கழகத் தோழர்கள் ஆசிரியர் தியாகுசுந்தரம், மகராஜா, சி.இரா. ஆனந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த தங்கராசு, மகராஜா, கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனபால் சிறப்பாக சுவரொட்டிகள் ஒட்டி நிகழ்வினை ஒருங்கினைத்திருந்தார். பகுதியில் புதியதாக நிகழ்வுகள் ஏற்பாடு செய்தமைக்காக மூத்த பெரியாரியல் தோழர்கள் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் தந்தை பெரியாரின் 42ஆவது நினைவு நாள் அன்று கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலைக்கும் இராயபேட்டை, மந்தைவெளியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. களப்பணியாற்றிய போது விபத்தில் உயிர் நீத்த கழகச் செயல்வீரர்கள் கண்ணன், குமார் ஆகியோரின் நினைவு நாளும் டிசம்பர் 24 தான். அவர்களின் நினைவாக கழகம் சுவரொட்டிகளை ஒட்டியும் படிப்பகத்தில் இவர்களின் படங்களுக்கு மாலையிட்டும் வீரவணக்கம் செலுத்தியது.

பெரியார் முழக்கம் 28012016 இதழ்

You may also like...