Tagged: புதுச்சேரி திவிக

புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் 16122015

புதுச்சேரி அரசில் அரசுச் செயலாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அர்டசுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம்...