Tagged: புதிய கல்விக் கொள்கை

திவிக வரவேற்கிறது இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு ஆதரவு’...

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடியில்  வடக்கு சோட்டையன் தோப்பில் 24.9.2016 சனிக்கிழமை மாலை 6 மணியளவில்  பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா கல்வியை காவி மயக்கும்  புதிய கல்வி கொள்கை 2016யை கண்டித்து பொதுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். வடக்கு சோட்டைன், தோப்பு தோழர்கள் கே. சந்திரசேகர், செ. செல்லத் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ச.கா. பால சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய பொதுவுடைமை கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.பி. ஞானசேகரன், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய செயலாளர் சங்கரன், கழக மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் க. கண்ணன், விடுதலை சிறுத்தைக் கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்காமை. இக்பால், கழகத் தோழர் கோ. அ. குமார், வி.சி.க....