Tagged: பாமரன்

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

‘நட்புத் திருவிழா’வாக நடந்த பாமரன் இல்ல மண விழா

சீரிய பெரியாரியலாளரும் எழுத்தாளருமான பாமரன் – யாழ்மொழி ஆகியோரின் மகன் சேகுவேரா-கனிமொழி ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா, ‘பீடை மாதம்’ என்று மூடநம்பிக்கையாளர்களால் கருதப்படும் ஆடி 28ஆம் தேதி (ஆகஸ்ட் 13) மாலை கோவை பி.எம்.என். திருமண மண்டபத்தில் ‘நண்பர்கள் கூடும் திருவிழா’வாக சிறப்புடன் நடந்தது. நிமிர்வு கலையகத்தின் பறை இசை யுடன் நிகழ்வுகள் தொடங்கின. கலைஞர்களுக்கு கவிஞர் அறிவுமதி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நினைவு பரிசுகளை வழங்கினர். ஈழப் போராளி பாலகுமார் துணைவியார், பாமரனின் வயது முதிர்ந்த தாயார் முன்னிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணமக்களுக்கு சுயமரியாதை திருமணத்துக்குரிய உறுதி மொழிகளைக் கூற, மணமக்கள் உறுதியேற்று மாலை மாற்றிக் கொண்டனர். பெரியாரியலாளரும் ஆய்வாளருமான தொ. பரமசிவம், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் கலை, இலக்கிய, திரை உலக நண்பர்கள்,...

வரலாற்றுச் “சிரிப்பு” மிக்க வாக்குறுதி… பாமரன்

காஷ்மீரிகளின் தனித்துவம்….. படிக்க ஒருவேளை உங்களில் சிலருக்கு சலிப்பு வரலாம்…. என்னடா இப்பத்தான் இவன் 1947 க்கே வந்திருக்கான்….. எப்ப இவன் 2010 க்கு வர்றது? நாம எப்ப காஷ்மீரப் பத்தி தெரிஞ்சுக்கறது? என்று எரிச்சல் கூட வரலாம். ஒரு விடுதலைப் போராட்ட வரலாற்றை ஓரிரு வாரங்களுக்கு வாசிக்கவே நமக்குள் இத்தனை சலிப்பு என்றால் நானூறு…. ஐநூறு ஆண்டுகளாய் விடுதலைக்காக ஏங்கித் தவிக்கும் ஒரு இனத்துக்கு…. தொடர்ச்சியான அடக்குமுறைக்கும்…. அடிமைத்தனத்திற்கும் பலியாகிக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்துக்கு எத்தனை சலிப்பும், எத்தனை எரிச்சலும், எத்தனை ஏமாற்றமும் இருக்கும்? ஆனால் அதிசயத்தக்க வகையில் அப்படி எதுவும் இல்லாமல் இன்னமும் அயராது போராடிக் கொண்டிருப்பதுதான் காஷ்மீர மக்களின் தனித்துவம். இனி தொடர்வோம்….. ”காஷ்மீரில் நிகழ்கின்ற சம்பவங்களை மத மோதல்களாகவே சித்தரிக்கின்ற வைதீக இசுலாமியர்களும் உண்டு. வைதீக இந்துக்களும் உண்டு. ஆனால் உண்மை இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டே நிற்கிறது. அந்த உண்மைக்கு இன்னும் கொஞ்சம் அருகில் செல்ல...

காஷ்மீரிகளின் தனித்துவம்….. பாமரன்

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் சென்ற வாரம் ”ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் இவர்களிடம் இருந்து வருகிறது. நான் பார்த்தவரையில் இவர்கள் ஒரே மக்களாகவே இருந்து வருகிறார்கள். காஷ்மீரி இந்துவுக்கும், காஷ்மீரி முசுலீமுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் என்னால் காண முடியவில்லை. ஜம்மு, காஷ்மீர் ஆகியவற்றின் எதிர்காலத்தை காஷ்மீரிகளின் விருப்பமே தீர்மானிக்க வேண்டும் என என் அறிவு கட்டளையிடுகிறது.” – மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. இன்று காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்தினை இந்து முசுலீம் இடையிலான போராட்டம் என்றோ…… அல்லது இந்தியா பாகிஸ்தான் இடையிலான யுத்தம் என்றோ எண்ணிக் கொண்டிருந்தால்….. நாம் எங்கோ தவறான திசையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம். காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை ஓரளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதற்கு முன்னதாக காஷ்மீரி மக்களின்  தனித்துவமான பண்பாட்டைப் பற்றிப் புரிந்து கொண்டால்தான் அது சாத்தியப்படும். பெரும்பான்மையான மக்கள் இசுலாமியர்கள் என்றாலும் பெளத்தர்கள்….. சீக்கியர்கள்…....

காஷ்மீர் – ஒரு முன்கதை சுருக்கம் – பாமரன்

அரை நூற்றாண்டுக்கும் மேலாய் தொடர்ந்து கொண்டிருக்கும் காஷ்மீரின் துயரத்தை ஓரிரு பக்கங்களில் அடக்கிவிட முடியுமா என்ன? இது வரையிலும் இதுபற்றி வெளிவந்துள்ள நூற்றுக்கணக்கான புத்தகங்கள்….. ஆயிரக்கணக்கான கட்டுரைகள்…… மரியாதைக்குரிய நீதிபதிகளது உண்மை அறியும் குழுக்களின் அறிக்கைகள்…. என எண்ணற்ற ஆதாரங்களை கரைத்துக் குடிக்காவிட்டாலும் பரவாயில்லை…. குறைந்தபட்சம் அதில் கால்பங்காவது கவனத்தில் கொள்ள வேண்டுமே.? ஏனெனில் இதனை எழுத முற்படுவது எனது கட்டுரைகளில் மேலும் ஒரு எண்ணிக்கையைக் கூட்டிக்காட்டும் என்பதைக் காட்டிலும்….. ரத்தம் சிந்த போராடிக் கொண்டிருக்கும் எவரையும் தப்பித்தவறிக் கூட தவறுதலாகக் காட்டிவிடக் கூடாது என்பதுதான் எனது தயக்கம். அந்த அச்சம்தான் என்னை இவ்வளவு நாளும் பிடித்தாட்டிக் கொண்டிருந்தது. “ராணுவத்தின் மீதே கலவரக்காரர்கள் கல்லெரிகிறார்கள்.” “அமைதியை நிலை நாட்ட வேறு வழியின்றி ராணுவம் துப்பாக்கிச் சூடு” “பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் தாக்குதல்” என அன்றாட தலைப்புச் செய்திகளை மட்டும் நுனிப்புல் மேய்ந்துவிட்டு நாமும் ஓய்வெடுக்கலாம்தான். ஆனால் இதுவெல்லாம் அப்படியே நூற்றுக்கு...