Tagged: நியூட்ரினோ

“நியூட்ரினோ” திட்டத்திற்கு எதிராக போராடும் தோழர் முகிலன் கைதிற்கு கண்டனம்

தென் தமிழகத்தின் பாதுகாப்பிற்கே பேரபாயத்தை உருவாக்கும் “நியூட்ரினோ” திட்டத்திற்கு எதிராக பல்வேறு அடக்கு முறைகளை சந்தித்து களத்தில் போராடும் தோழர் முகிலன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் தனது ஆதரவினை தெரிவிக்கிறது. தோழர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடில்லாமல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதை கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை இந்த தேர்தலில் தோற்கடிப்போம். நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்காத கட்சிகளை தோற்கடிப்போம் என்ற வேலைத் திட்டத்தோடு 08.05.2016 தேனி மற்றும் போடி பகுதிகளில் பரப்புரை இயக்கத்தை துவங்கினார் தோழர் முகிலன். இயற்கை வள பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் காலை தேனி கிருஷ்ணா திரையரங்கம் முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்புடன் பரப்புரை துவங்கியது. பரப்புரையின் தொடர்ச்சியாக போடி பேருந்து நிலையத்தில் மதியம் 2 மணியளவில் துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த...