பரப்புரைப் பயணத்திலிருந்து…
‘நம்புங்க அறிவியலை; நம்பாதீங்க சாமியார்களை’ என்ற முழக்கத்தோடு திராவிடர் விடுதலைக் கழகம் நான்கு முனைகளிலிருந்து புறப்பட்ட பயணம் குறித்த செய்தி தொகுப்பு. சென்னையிலிருந்து புறப்பட்ட பயணக் குழு, ஆகஸ்டு 6ஆம் தேதி தொடக்க விழாவை சென்னை இராயப்பேட்டையில் பொதுக் கூட்டமாக நடத்தி, 7ஆம் தேதி காலை புறப்பட்டது. முதல் நாள் பயணத்தை காஞ்சிபுரத்தில் நிறைவு செய்து இரண்டாம் நாள் பயணத்தை நெமிலியில் நடத்தி முடித்து, காவேரிப்பாக்கம் வந்தவுடன், ‘இந்து முன்னணி’ என்று சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே காவல் துறை வேலூர் மாவட்டம் முழுதும் அனுமதி மறுத்தது. அதைத் தொடர்ந்து திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது. காவல்துறை தடையைத் தொடர்ந்து சென்னை பரப்புரைக்குழுவினரும் வீதி நாடகக் குழு வினரும் சத்திய மங்கலம் பரப்புரைக் குழுவின ரோடு இணைந்து பரப்புரை செய்ய முடி வெடுத்து ஈரோடு பயணமாயினர். சென்னைக் குழுவைச் சேர்ந்த தோழர்களில் ஒரு பிரிவினர் ஆத்தூரில் தங்கி நிறைவு விழா நிகழ்ச்சிக்கான நன்கொடை திரட்டல்;...