முகத்திரை கிழிந்த சில சாமியார்களின் கதை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி தாடகை நாச்சி அருவி பக்கத்தில் இரமணகிரி மடம் உள்ளது. அதில் அருகிலுள்ள ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த முனீஸ்வரியின் மகன் ஆனந்த சுவாமி (22) சாமியாராக இருக்கிறார். மழை வேண்டியும் மக்கள் நலனுக்காகவும் இந்த சாமியார் வெள்ளிக்கிழமை (சூன் 11, 2004) இரவு 8 மணிக்கு 7 அடி ஆழத்தில் மூடிய குழிக்குள் தவம் இருக்கத் தொடங்கினார். ஞாயிறு காலை சரியாக 8 மணிக்கு வெளியில் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவார் என அவரது சீடர்கள் அறிவித்தார்கள். இதைக் காணப் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி இருந்தார்கள். இந்தச் சாமியார் இதற்கு முன்னர் குழிதோண்டி குழிக்குள் ஒரு நாள் தவம் இருந்து உயிரோடு வெற்றிகரமாக வெளியே வந்து தனது ‘சக்தி’யை பக்தர்களுக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறார். முதலில் நிலத்துக்குள் குழி தோண்டி அதற்குன் முன்கூட்டியே சுவாமி சிலைகள், படங்கள், பூசைப் பொருள்கள், பழங்கள், தண்ணீர் முதலியன வைக்கப்படும். அதன் பிறகு...