Tagged: தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்

திரளான மக்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்ற கழகத்தின் சேலம் மாநாடு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது. ”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப்...