கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை
தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சி யினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்ற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை’ கொண்டு வர பரிசீலிக்கலாம் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ உள்ளிட்ட ஆய்வாளர்கள் யோசனை அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை? இதன் சிறப்பம்சங்கள் என்ன? விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர் இருக்க மாட்டார்கள். மாறாக அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும். கட்சி களின் பிரதிநிதிகள் பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கேற்ப எம்.பி.,...