பிரிட்டனில் பார்ப்பனர்கள் திணிக்கும் தீண்டாமைக்கு கடும் எதிர்ப்பு
பிரிட்டனில் குடியேறிய பார்ப்பன உயர் ஜாதி இந்துக்கள், அங்கும் ஜாதியையும் தீண்டாமையையும் பின்பற்றி வரும் அவலம் நீடிக்கிறது. கடந்த மார்ச் 2 ஆம் தேதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் களிடையே நிலவும் ஜாதிப் பாகுபாடுகளுக்கு எதிரான கருத்தரங்கம் ஒன்று நடத்தப்பட்டது. தெற்காசிய ஒற்றுமைக் குழு ‘ஜாதிய கண்காணிப்பு மய்யம்’ தெற்காசிய புலம் பெயர் சமூகம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கினை நடத்தின. பிரிட்டனில் ‘ஜாதிய கண்காணிப்பகம்’ என்ற ஜாதிக்கு எதிரான அமைப்பு அங்கே இப்போதும் ‘இந்து’, ‘சீக்கியர்’ சமூகங்களில் பின்பற்றப்பட்டு வரும் ஜாதி தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. 2010ஆம் ஆண்டில் பிரிட்டனில் நிறவெறி பாகுபாடு களுக்கு எதிராக ‘சமத்துவ சட்டம்’ ஒன்றை அந்நாடு கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தில் ஜாதிய பாகுபாட்டுக்கு எதிரான பிரிவையும் இணைக்க வேண்டும் என்று பிரிட் டனில் இந்தியாவிலிருந்து குடியேறிய ஜாதி எதிர்ப்பாளர்கள் – தொடர் போராட்டங்கள் நடத்தி வலியுறுத்தினர்....