Tagged: துரோணாச்சாரி
“நான் பிறந்த ஜாதிதான் எனக்கு மோசமான விபத்து” – ரோகித் வெமுலா
பார்ப்பன ‘துரோணாச்சாரி’களின் வாரிசுகளா, உயர்கல்வி நிறுவனங்கள்? ‘ஏகலைவன்’களாக இனியும் இருக்க மாட்டோம்! ‘ரோகித் வெமுலா’ மரணத்துக்கு நீதி கேட்போம்! ‘ஏகலைவன்’ என்ற ஆதிவாசிக்கு ‘துரோணாச்சாரி’ என்ற பார்ப்பன குரு வில்வித்தை கற்றுத் தர மறுத்தான். ஏகலைவனோ, துரோணாச்சாரி உருவத்தை செய்து, அதையே குருவாகக் கருதி வித்தையைக் கற்றுத் தேறினான். உண்மை அறிந்த துரோணாச்சாரி, “கீழ் ஜாதிப் பயலே; வில்வித்தை கற்கும் உரிமை உன் குலத்துக்குக் கிடையாதுடா! குருதட்சணையாக உன் கட்டை விரலை வெட்டித் தா” என்று கேட்டான். ஏன் தெரியுமா? கட்டை விரலை வெட்டி விட்டால் வில்லிலிருந்து அம்புகளை விடவே முடியாது அல்லவா? இது வரலாறு அல்ல; ஆனால் புராணக் கதைகளின் வழியாக பார்ப்பனர்கள் சமூகத்துக்கு உணர்த்தும் பாடம்! ‘ஏகலைவன்’கள் கதை முடிந்துவிட்டதா? இல்லை. இல்லவே இல்லை. பார்ப்பன துரோணாச்சாரிகளின் வாரிசுகள் அய்.அய்.டி., அய்.அய்.எம்., அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழகம், மத்திய பல்கலைக் கழகங்கள் போன்ற உயர்கல்வி நிறுவனங்களை இன்றும்...