தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் ஈரோடு 18102017
ஆதித்தமிழர் பேரவை சார்பாக 18102017 மாலை 5 மணி அளவில் ஈரோடு மாநகராட்சி மண்டபத்தில் “தீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கத்தில்” திவிக தலைவர் தோழர் கொளத்தூர்மணி பங்கேற்றார். அதில் பேசியவைகளில் இருந்து சில துளிகள் மராட்டியத்தில் எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே ஏன் கொல்லப்பட்டார்?? பன்சாரே தன்னுடைய நூலில், மராட்டிய சிவாஜி இந்து மதத்திற்கு மட்டும் உரியவர் அல்ல.. இந்துக்களுக்காக மட்டும் போராடியவர் அல்ல.. அவர் தன்னுடைய படையில் மெய்க்காவலர்களாக நம்பிக்கைக்கு உரியவர்களாக இஸ்லாமியர்களையும் வைத்திருந்தார் என்று தொடர்ந்து ஆதாரத்துடன் ஆய்வு நூல்களை எழுதி வந்தார்.. இந்தக் கருத்துக்கு எதிரானவர்களாலேயே அவர் கொல்லப்பட்டார்.. தலைவன் என்பவன் தன் பின்னால் மக்களை அழைத்துச் செல்பவனாக இருக்க வேண்டும்; அடுத்தவர் பின்னால் செல்லக் கூடியவராக இருக்கக் கூடாது -பெரியார் பள்ளிக்கூடம் நடத்த நிதியில்லை என்று கூறி, 6000 கிராமப்புற பள்ளிகளை மூடிய ராஜாஜி, வேதபாடசாலைகள் அமைக்க 15 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கினார் ...