Tagged: திவிக தொடக்கம்

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

செயற்குழுவில் பெரும்பான்மை ஆதரவு இருந்தும், கழகப் பெயரை நாமே பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தும் பெரியார் இயக்கத்தின் மாண்பு காக்க – நாமே பிரிந்து செல்கிறோம்!

ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்பாடற்று முடங்குவதைவிட பிரிந்து போய் செயல்படுவதே சாலச் சிறந்தது புதிய பெயர் சூட்டி இயக்கப் பணிகளை முன்னெடுக்க… ஆக.12 இல் ஈரோட்டில் கூடுவோம், வாரீர்! பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை. அன்பார்ந்த தோழர்களுக்கு வணக்கம். நமது கழகத்துக்குள் தோழர் இராமக்கிருட்டிணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் பற்றி 07.07.2012 அன்று சென்னையில் நடந்து முடிந்த தலைமைச் செயற்குழுவில் விரிவாகவே விவாதித்தோம். பெரியார் கொள்கைகளை முன்னெடுப்பதில் கழகத்தில் நாம் சந்திக்க வேண்டியிருந்த முட்டுக்கட்டைகள் – எதிர்ப்புகள் குறித்து விளக்கினோம். ஒன்றுபட்ட இயக்கத்தில் செயல்படாமல் முடங்குவதைவிட, பிரிந்து நின்று செயல்படுவதே சாலச் சிறந்தது என்பதையும் கூறினோம். இதைத் தொடர்ந்து செயற்குழுவில் கருத்தைத் தெரிவித்த உறுப்பினர்களில் பெரும் பான்மையோர் (82க்கு 56 பேர்) பிரிந்து செயல்படுவதே நல்லது என்று கூறிய நிலையிலும்கூட, நாம் ஒற்றுமை...

கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

கொள்கை உறவுகளின் நெகிழ்ச்சி சந்திப்பு!

ஈரோட்டில் நடந்த கலந்துரையாடல் சந்திப்பு நிகழ்வுகளிலிருந்து ஒரு தொகுப்பு: விடியற்காலை 5 மணியிலிருந்தே தோழர்கள் வருகைத் தொடங்கவே ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபம் களை கட்டத் தொடங்கி விட்டது. காலை 9 மணி முதல் பேருந்திலும், சிற்றூர் களிலும் வரிசை வரிசையாக வரத் தொடங்கினர். கழகத் தோழர்கள், தோழியர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினர். காலையில் தனிப் பேருந்துகளில் வந்த தோழர்கள், வழியில் பவானி கூடுதுறை ஆற்று நீரில் நீராடி வந்து சேர்ந்தனர். தன் முனைப்புகளை புறந்தள்ளி, தன்மானக் கிளர்ச்சிக்கு அணியமாகும், தோழர்களே! வாரீர்! வாரீர்! என்று ஈரோடு மாவட்டக் கழகத்தின் சார்பில் பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. மேடையின் பின்புறத்தில், “இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தில், இணைய வரும் தோழர் களின் சந்திப்பு” என்ற பதாகை, அமைக்கப்பட் டிருந்தது. 11 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் – தோழர்களுடன் வாகனங்களில் சென்று பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள பெரியார்...

‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’கழகத்தின் புதிய பெயர்

‘திராவிடர் விடுதலைக் கழகம்’ என்ற பெயருடன் இலக்கு நோக்கிய இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்திட கழகத் தோழர்கள் ஈரோட்டில் நடந்த சந்திப்பில் முடிவெடுத்தனர். பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மை யினர் 51 பேர் ஈரோட்டுக்கு வந்த நிலையிலும் ‘நீக்கல் – விலக்கல்’ ஏதுமின்றி நாமாகவே தனி அமைப்பை உருவாக்கிடும் அறிவிப்பை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டார். 12.08.2012 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு, ஈரோடு செல்லாயம்மாள் திருமண மண்டபத்தில், ‘இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் இணையும் தோழர்கள் சந்திப்பு”, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் முன்னிலை யிலும் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முன்னதாக, கழகத் தலைவர் தலைமையில் தோழர்கள் திரளாகச் சென்று, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். இக்கலந்துரையாடல் கூட்டத்தில் பெரியார் திராவிடர் கழகத்தின் 82 தலைமைச் செயற்குழு உறுப்பினர்களில் 51 உறுப்பினர்கள்...