Tagged: திருச்சி செயலவை

உற்சாக உணர்வலைகளோடு நடந்த கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் திருச்சியில் கரூர் புறவழிச் சாலையிலுள்ள இரவி ‘மினி ஹாலில்’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11 மணியளவில் தொடங்கியது திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் ஆரோக்கியசாமி, கடவுள்-ஆத்மா மறுப்பு கூறினார். முடிவெய்திய கழகத் தோழர் மல்ல சமுத்திரம் கண்ணன், மூத்த பெரியார் தொண்டர் பட்டுக்கோட்டை சதாசிவம், ரோகித் வெமுலா ஆகியோர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து, நிகழ்ச்சிகள் தொடங்கின. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாக கடந்த ஜூலை மாதம் நடந்த தர்மபுரி செயலவைக்குப் பிறகு, கழக நிகழ்வுகளை சுட்டிக்காட்டி கழகக் கொள்கைகளை வெகு மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கு கிடைத்துள்ள வாய்ப்புகளை தீவிரமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், செயலவை உறுப்பினர்கள் உள்ளிட்ட 40 தோழர்கள் கருத்துகளை முன் வைத்தனர். கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு...