Tagged: தினமணி

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்வது பா.ஜ.க. தான் என்பதை விளக்கி, பா.ஜ.க. ஆதரவு நாளேடான ‘தினமணி’யே (அக்.5) தலையங்கம் தீட்டியுள்ளது. ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பதுபோல் பா.ஜ.க.வின் துரோகத்தை அதன் ஆதரவு ஏடே அம்பலமாக்கும் அந்தத் தலையங்கத்தை இங்கே வெளியிடுகிறோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் கூறிய போதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது...

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வின் ஊதுகுழலாக வெளி வரும் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர் கி. வைத்தியநாதன் எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஹரித்துவாரில் திட்டமிடப் பட்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சென்றார்.  ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் உ.பி. மாநில ஆளுநர் ராம்நாயக் சிலையை திறந்து வைத்தார் என்று படங்களுடன் ‘தினமணி’ நாளேட்டில் ஒரு முழுப் பக்கத்துக்கு செய்தியை வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழ் நாட்டைச் சார்ந்த இப்போது மேகலயா ஆளுநராக இருக்கும் சண்முகநாதன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், காங் கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் போன்ற ஒரு சில தமிழர்கள் மட்டுமே பங்கேற்றனர். கங்கை நதிக்கரைப் பகுதி யிலுள்ள வளாகத்தில் சிலை திறக்கப்பட்டதாக பொய்யான செய்தி வெளியிட்ட ‘தினமணி’ நாளிதழ், கடைசி வரியில் தப்பித்துக் கொள்வதற் காக எதிர்ப்புக் காரண மாக பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதாக அடிக் குறிப்பு போட்டிருக்...

வினா-விடை!

வினா-விடை!

ஏழுமலையானுக்கு விசாகப்பட்டினத்தைச் சார்ந்த பக்தர், ரூ.30 இலட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ எடையுள்ள பாத கவசம் (செருப்பு) வழங்கினார்.   – செய்தி ஏழுமலையான் எந்தக் காலத்திலும் எழுந்து நடக்கவே போவதில்லை என்பதில் பக்தருக்கு அவ்வளவு உறுதியான நம்பிக்கை போலும்! அதனால்தான் ஒரு கிலோ எடையில் செருப்பு. 1967இல் தி.மு.க.விடம் ஆட்சியை பறிகொடுத்த போது 41.10சதவீதமாக இருந்த காங்கிரசின் வாக்கு வங்கி 2014 மக்களவைத் தேர்தலில் 4.3 சதவீதமாக சரிந்தது.     – ‘தினமணி’ செய்தி திவாலாகும் வங்கியைக் காப்பாற்ற முடியாது; இதுக் கெல்லாம் ரிசர்வ் வங்கியும் உதவி செய்யாது! அன்னிய நேரடி முதலீடு உள்ளிட்ட முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர அன்னியநாடுகள் அல்ல.  – ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஆமாம்! ‘அன்னிய முதலீடு’ பற்றி வெளிநாட்டுக் காரர்களுக்கு முடிவெடுக்க உரிமை கிடையாது; நாங்களே அந்த முடிவை தேசபக்தியோடு எடுப்போம்! தமிழகத்தில் காங்கிரசை வலுப்படுத்த உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.  – ஜி.கே. வாசன்...