Tagged: தமிழகத்தின் தனித்தன்மையை காப்போம்

திருச்செங்கோட்டில் எழுச்சியூட்டிய பயண நிறைவு விழா மாநாடு

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 6 நாள் பரப்புரைப் பயணம், திருச்செங்கோட்டில் பயண நிறைவு விழா மாநாடாக எழுச்சியுடன் நடந்தது. ஆகஸ்டு 12 திராவிடர் விடுதலைக் கழகம் தொடங்கப்பட்ட நாளாகும். மாலை 4 மணியிலிருந்து ஒவ்வொரு பயணக் குழுவினரும் திருச்செங்கோடு நோக்கி வரத் தொடங்கினர். பயணத்துக்கு மக்கள் காட்டிய பேராதரவில் தோழர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். 6.30 மணியளவில் திருச்செங்கோடு நெல்லுக்குத்தி மண்டபம் அருகில் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் வரவேற்புரையாற்றியதைத் தொடர்ந்து மேட்டூர் டி.கே.ஆர். குழுவினரின் பறை இசை, பயணத்தில் மக்களிடம் நடத்திய வீதி நாடகக் கலை நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து சென்னை பயணக் குழுவில் வந்த விரட்டு குழுவினரின் பறை. வீதி நாடகம், கலை நிகழ்வுகள் நடந்தன. தொடர்ந்து 5 பயணக் குழுக்கள் சார்பில் குழுவில் பங்கேற்ற...

மாநாட்டின் தீர்மானங்கள் ‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் 12-08-2017 அன்று நடைபெற்ற, சமூகநீதி – சமத்துவ பரப்புரைப் பயண நிறைவு மாநாட்டில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள்: காவல்துறையில் தனிப் பிரிவு :  தீர்மானம் : 1 – ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு, மதுரை, சேலம் மாவட்டங்களில் காவல் துறையில் தனிப்பிரிவு ஒன்றை, உயர் நீதிமன்ற ஆணையை ஏற்று, தமிழக அரசு நியமித்திருப்பது, காலம் கடந்த நடவடிக்கை என்றாலும், திராவிடர் விடுதலைக் கழகம் வரவேற்கிறது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்தகைய தனிப் பிரிவுகள் அமைக்கப்படுவதோடு, அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்க சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும், இந்த தனிப்பிரிவு காவல் துறையை தீண்டாமை ஒழிப்புப் பிரிவினைப் போல சடங்குத்தனமான பிரிவாக்கிவிடாமல் உண்மையில் செயல்படக் கூடிய அமைப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்றும்...