Tagged: தந்தை பெரியார்

மதவாத சக்திகளை முறியடிக்க சூளுரை பெரியார் பிறந்த நாள் எழுச்சி கம்பீரமாக எழுகிறார் பெரியார்

பெரியாரின் 139ஆவது பிறந்த நாள் விழாக்கள் முன் எப்போதும் இல்லாத உணர்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் பெரியார் பிறந்த நாள் வாழ்த்துக்கள் குவிந்து வழிந்தன. ராகுல் காந்தி, கருநாடக முதல்வர் சித்தராமய்யா, லாலு பிரசாத், தலைசிறந்த ஆய்வாளர் இராமச்சந்திர குகா என்று அனைத்து தரப்பினரும் பெரியாருக்கு வாழ்த்துக் கூறினர். பெரியார் வரலாற்றுத் தேவையாகி யிருக்கிறார். சமூகத்தில் பீடு நடை போடுகிறார். பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழா இதுவரை காணாத அளவுக்கு தமிழகம் முழுதும் கொண்டாடப் பட்டது. திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நகரங்களில் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தோழர்கள் இணைந்து பேரணியாகச் சென்று பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்த காட்சி உணர்ச்சிமயமாக இருந்தது. பெரியார் இயக்கங்களைத் தவிர, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாணவர் அமைப்புகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மே 17 உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களும் பெரியார்...

இதுதான் சமஸ்கிருதம் ! – தந்தை பெரியார்

( “ புரட்டு இமாலயப் புரட்டு! “  நூலிலிருந்து…. ) சமஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல; அது அந்நிய பல நாட்டுக் கதம்ப மொழி. அடிநாளில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது, தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkish) மொழி, ஈரானிய மொழி – பாக்ட்ரினியாவில் குடியேறிய பின் பர்மீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த கதம்பமே சமஸ்கிருத மொழி.   மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.   இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க –...

சமஸ்கிருத சனியன் – தேசீயத் துரோகி

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.   சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும்.   உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு...

எந்தப் பெயரில் அழைத்தாலும் ரோஜா ரோஜாதான் – இளவேனில்  

பயனற்ற வாதங்களால் பொழுதழிக்கும் வேலையற்றதுகளின் போக்கை `மயிர் பிளக்கும் வாதம்’ என்று மக்கள் எள்ளலாய்க் குறிப்பிடுவார்கள். உடலும் பொருளும் தேய்ந்துபோன ‘மைனர்’களுக்குத்தான் இம்மாதிரியான மயிர் பிளக்கும் வாதங்கள் உற்சாகம் தரும் என்றில்லை. புலமைப் பகட்டர்களுக்கும் இதில் போதை ஏறுவதுண்டு. சித்தினி பத்தினியாக இருக்க முடியுமா? ‘இலை’ வடிவம் எம்மாதிரியானது? என்கிற ஆராய்ச்சியில் மைனர்களுக்கு உற்சாகம் என்றால், பெரியார் தாடியில் எத்தனை மயிர்? திராவிட இயக்கம் என்பது விஞ்ஞான வகைப்பட்டதா? என்பன போன்ற வாதங்களில் புலமைப் பகட்டர்களுக்கு உற்சாகம். இவர்கள் `அறிவுப் பூர்வமாகவும்’ ‘ஆதாரப் பூர்வமாகவும் திராவிட இயக்கத்தை எதிர்ப்பதன் மூலம் என்ன சாதிக்கப் போகிறார்கள்? `திராவிட மாயை’யிலிருந்து தமிழர்களை விடுவித்து, தமிழ்த் தேசிய உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலை பெற்றதொரு புதிய நாட்டை உருவாக்கப் போகிறார்களா? ஏறத்தாழ எண்பது ஆண்டுகளாக அதாவது திராவிடர் கழகம் என்றோர் அமைப்பு தோன்றிய நாள் முதலாகவே இம்மாதிரியான திராவிட இயக்க எதிர்ப்புக் குழுக்களும் விவாதங்களும் இருந்து கொண்டுதான்...

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

‘சித்திரை’யில் தொடங்குவது அறிவியலுக்கு எதிரானது : பஞ்சாங்கத்தைப் புறந்தள்ளிய ‘மேனக்ஷா’ குழு

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ‘சித்திரை’ தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்திருப்பது, அவரது பார்ப்பனிய இந்துத்துவ ஈடுபாட்டைத்தான் வெளிப்படுத்துகிறது. திராவிடர் விடுதலைக் கழகம் இந்த மாற்றத்தை வன்மையாக எதிர்க்கிறது. சித்திரை தான் தமிழ்ப் புத்தாண்டு என்பது அறிவியலுக்கு எதிரானது. தமிழர் கொண்டாடிய தை புத்தாண்டு, சித்திரைக்கு மாறியது எப்படி? குப்தர் வம்சத்தில் வந்த இரண்டாம் சந்திர குப்தன் தனது பெயரை விக்கிரமாதித் தன் என்று மாற்றிக் கொண்டு – தனது பெயரால் ‘விக்கிரம சகம்’ என்ற ஆண்டு முறையை உருவாக்கிக் கொண்டான். வானவியலை அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்த ஆரியபட்டருக்கு எதிராக வானவியலில் – சாதகம், சோதிடத்தைப் புகுத்தும் முயற்சிகள் அவனது காலத்தில் மேற் கொள்ளப்பட்டன. எனவே வானியல் சிந்தனை யாளர் ஆரியபட்டர் புறக்கணிக்கப்பட்டு, பழமையில் ஊறியவரான மிகிரர் உயர்த்திப் பிடிக்கப்பட்டார். அப்படி விக்கிரமாதித்தன் உருவாக்கிய ‘விக்கிரம சகம்’ எனும் ஆண்டு முறையில் சித்திரை முதல் நாளே ஆண்டின் முதல் நாளாக்கப்பட்டது....

நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்

நாகம்மையார் மறைவும் பெரியார் நடத்திய தடையை மீறிய திருமணமும்

பெரியரின் வாழ்க்கைத் துணையாகவும் அவரது காங்கிரஸ் கால போராட்டங்களான கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம் ஆகியவற்றில் ஏராளமான பெண்களையும் உடன் இணைத்துக் கொண்டு வீதியில் இறங்கி ஆவேசமாகப் போராடிய கொள்கைத் துணையாகவும் விளங்கியவர் நாகம்மையார். பெரியாரின் சுயமரியாதை இயக்கக் காலகட்டத்தி லும் சுயமரியாதை இயக்கத் தோழர்களுக்கு உணவும், உபசரிப்பும் கொடுத்துப் பேணிய தாயாகவும், பல சுயமரியாதை, சாதிமறுப்பு, மறுமணங்களை முன்னின் றும், தலைமையேற்றும் நடத்தியும் பெரியாருக்கு கொள்கைத் துணைவராக விளங்கியவர் அவர். அவர் 11-5-1933 அன்று இறந்து போனார். அதற்கு அடுத்த நாளே திருச்சிக்கு புறப்பட்டுப் போய், 144 தடை உத்திரவையும் மீறி, கிருத்துவர்களின் சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்தார். அதற்காக கைது செய்யப்பட்டாலும், இரவு 11 மணிக்கு விடுதலை செய்யப்பட்டார் என்று பெரியாரின் வாழ்க்கை குறிப்புகள் நமக்கு கூறுகின்றன. அவ்வாறு பெரியார் தலைமையில் மணம் முடித்துக் கொண்ட அந்த கிருத்துவ இளைஞர் எம்.ஏ.சவுந்திர ராஜன். 46 ஆண்டுகள் கழித்து 27-5-1979...