Tagged: ஜாதி மறுப்பு இணையருக்கு பாராட்டு விழா
சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் குனுடு முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர். அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது. பாராட்டுப் பெற்ற ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர் ஜெயமாலா-மனோகர்;...
மேட்டூர் விழாவில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக துணையை இழந்த நிலையிலும் தனித்து நின்று ஜாதி ஒழிப்புக்காக தீரத்துடன் குரல் கொடுக்கும் நான்கு பெண்களுக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. உடுமலை கவுசல்யா, ஈரோடு சுகுணா, பவானி சாகர் கோமதி, இராசிபுரம் மலர் ஆகிய நான்கு தோழியர்களும் நிகழ்வில் பங்கேற்று விருதுகளைப் பெற்றனர். உடுமலை கவுசல்யா: ஜாதி எதிர்ப்புக் குறியீடாக தமிழகத்தில் பேசப்படும் பெயர் உடுமலை கவுசல்யா. தலித் இளைஞரை திருமணம் செய்து கொண்ட காரணத்துக்காக பட்டப்பகலில் கண்ணெதிரே ஜாதி வெறியர்கள் படுகொலைக்கு துணைவரை பறி கொடுத்தவர். பெற்றோர்களின் ஜாதி வெறிக்கு எதிராக துணைவரை இழந்த நிலையிலும் துணைவர் இல்லத்திலேயே வாழ்வேன் என்று வாழ்ந்து காட்டி வருபவர். ஈரோடு சுகுணா : ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சார்ந்த தோழர் இராஜாகண்ணு என்பவரை காதல் மணம் புரிந்த சுகுணா, மேட்டூர் கழகத் தோழர்களால் 1999ஆம் ஆண்டு திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதனைத்...
காதலர் நாளை முன்னிட்டு ஜாதி மறுப்பு திருமணம் செய்த இணையர்களுக்கும், ஜாதி மறுப்புத் திருமணப் போராட்டக் களத்தில் பங்கு பெற்ற தோழர்களுக்கும் விருதுகள் வழங்கும் விழா மேட்டூரில் எழுச்சி உற்சாகத்துடன் நடைபெற்றது. மேட்டூர் அணை பாப்பம்மாள் திருமண மண்டபத் தில் திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி 12.2.2017 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை கலை நிகழ்வுகளுடன் நடந்தது. கலை கருத்தரங்கில் ஜாதி மறுப்பு – மத மறுப்பு இணையர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை ஜாதி மறுப்பு மணம் புரிந்தோர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், சவால்கள் பற்றி விவாதித்தனர். மதிய உணவைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடந்தன. பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு திரையிசைப் பாடல்களை டி.கே.ஆர். இசைக் குழுவினர் நிகழ்த்தினர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்களே பாடல்களைப் பாடியதும்,...
ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. காலை 10 – 12 கருத்தரங்கம் நண்பகல் 12 – 1 இணையர்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிற்பகல் 2 – 3 கலை நிகழ்ச்சிகள் மாலை 3 – 4 இணையர்களின் தனித் திறமைகளை வெளிப்படுத்துதல் மாலை 4 முதல் பாராட்டு விழா வாய்ப்புள்ள தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும் 9965025847 8056460580 செய்தி இரண்யா