Tagged: ஜாதியவாதமே

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

கடும் மழையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

திராவிடர் விடுதலைக்கழகம்,சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க்கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி,பட்டி மன்றம்,கருத்தரங்கம்,கருத்துரை ஆகியன இடம்பெற்றன. சென்னையில் மழை வரும் சூழல் நிலவிய போதும் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழக தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள்.காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள்,தோழமை அமைப்புகள்,பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை 10 முதல் நிகழ்வாக சம்பூகன் கலைக்குழுவினரின்...