சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு 12122015 மதுரை
12 டிசம்பர் 2015 அன்று காலை 9.30 மணி அளவில் சாதி கொடுமைகளுக்கு எதிரான மாநாடு நடைபெற்றது. எவிடென்ஸ் அமைப்பு ஏற்பாடு செய்து இருக்கும் இந்த மாநாடு மதுரை – கே.புதூரில் அமைந்து உள்ள டி நோபிலி அரங்கில் நடைபெற்றது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சாதி வேறுபாடுகள் கூடாதென சட்டம் வலியுறுத்தினாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு வரமுடியாதவர்களாக பெரும்பகுதி மக்கள் இருக்கின்றனர் என்றார் சாதி, மத ஆதிக்கம் அரசியலிலும், ஆட்சியிலும் நுழைவது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். எவிடன்ஸ் அமைப்பு சார்பில் மதுரை கோ.புதூர் டிநோபிலி அருள் பணி மைய அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற சாதியக் கொடுமைகளுக்கு எதிரான மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் தீண்டாமை கூடாது என்கிறது. அதன் பிறகு வந்த குடியுரிமைச்...