Tagged: சுவரொட்டி

காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – சுவரொட்டியில் மதுரை திவிக பதிலடி

மதுரை முழுதும் பாஜகவினர் நூற்றுக்கணக்கான இடங்களில் “கழகங்கள் இல்லா தமிழகம் ” என்ற விளம்பரத்தை செய்துள்ளது. அதற்கு பதிலடியாக காவிகள் நுழையா தமிழகம், கலவரம் இல்லா தமிழகம் – என்ற தலைப்பில் பிரம்மாண்ட சுவரொட்டிகளை தயாரித்து மதுரை மாவட்ட திவிக தோழர்கள் மதுரையெங்கும் ஒட்டியுள்ளார்கள்  

வழிகாட்டுகிறது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

அனைவருக்கும் பொதுவான அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட மத சம்பந்தமான விழாக்கள் கொண்டாடக்கூடாது ” என்ற நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கழக மாநில அமைப்புச்செயலாளர் தோழர்.இரத்தினசாமி ,மாவட்ட செயலாளர் தோழர் சண்முகப்பிரியன் மற்றும் தோழர்கள் சார்பில் நேரில் மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்தும்படி அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிட்டார். இதனால் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி, ஆயுத பூசை கைவிடப்பட்டது. இதனைப் பாராட்டும்விதமாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி