Tagged: சுப்புலட்சுமி ஜெகதீசன்

காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’...