Tagged: சட்ட எரிப்பு நாள்
இளைய தலைமுறைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. நவம்பர் 26, 1957 தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நாள். அன்றுதான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற புரட்சிகரப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை அறிவித்தவர் பெரியார். அது என்ன போராட்டம்? இந்தியாவின் அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீ வைத்து எரிக்கும் போராட்டம். அப்படி ஒரு போராட்டம் நடந்ததா என்று வியப்படையாதீர்கள். உண்மையில் நடந்தது. அரசியல் சட்டம் தமிழ்நாடு முழுதும் வீதிகளில் எரிக்கப்பட்டது. பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் 10000 பேர் எரித்தார்கள். கைதானவர்கள் 3000க்கும் மேல். அவர்களில் பெண்கள், ஆண்களும் சிறுவர்களும் இருந்தார்கள். 3 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றார்கள். மற்றொரு வியப்பான செய்தி தெரியுமா? இவர்கள் அனைவரும் பிணையில் வெளிவர மனு போட வில்லை; எதிர் வழக்காடவில்லை! “ஆம் சட்டத்தை எரித்தோம்; நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயாராக வந்துள்ளோம்” என்று நெஞ்சு நிமிர்த்தி...
1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர் வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல் பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்ட எரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக் கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள் பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின் மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்து கிருட்டிணன் மனைவி இறந்து விட்டார். மனைவிக்கு இறுதி மரியாதை செலுத்த முத்துகிருட்டிணன் பரோல்கூட...
1957 நவம்பர் 26 – சட்ட எரிப்புக்கு முதல் நாள் பெரியார் திருச்சியில் முன்கூட்டியே கைது செய்யப்பட்டு விட்டார். இது குறித்து ‘விடுதலை’ ஏடு வெளியிட்ட செய்தி: ஜாதி ஒழிப்புக்கு, பெரியார் கொடுத்த 15 நாள் கெடு 18.11.57 அன்று முடிவடைந்தது. எந்தப் பயனும் இல்லாததால் நவம்பர் 26இல் சட்டம் கொளுத்தும் போராட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 26.11.57 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சடிக்கப்பட்ட தாள் கட்டினை எரிக்க நாடு முழுவதும் தோழர்கள் பெயர்கள் பட்டியல் தந்து போராட்டத்திற்கு ஆவலாக அணியாயிருந்தனர். பெரியார் அவர்கள், 25.11.57 இல் சீரங்கம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விரைவுத் தொடர் வண்டி (எக்ஸ்பிரஸ்) மூலம், சென்னைக்கு வந்து நவம்பர் 26இல் சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம் ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதி யில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்தத் திட்டமிட் டிருந்தார்கள். இந்நிலையில், 25.11.57 மாலை பெரியார் அவர்கள், அவரது புத்தூர்...