Tagged: சட்டவிரோத நடைபாதை கோயில்களை அகற்று

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக அரசு நடைபாதை கோயில்களை அகற்றுமா?

கோயில்களைக் கட்டி காசு வசூல் செய்யும் நபர்கள் எப்போதும் பொது இடங்களிலும், சாலை ஓரங்களிலும்தான் கட்டுகிறார்கள் என்பது ஊரறிந்த இரகசியம். சாலைகளில் விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணம் சாலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் கட்டடங்களேயாகும். ஆகவே, சாலைகளில் திடீரென்று ஆங்காங்கே முளைத்துள்ள கோவில்களை இடிக்க வேண்டும் என்று கூறி குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. 2006ஆம் ஆண்டு இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சட்டவிரோத கோயில்களை இடிக்க உத்தரவிட்டனர். கோயில்களை இடித்தால் பக்தர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். இதனால் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கூறி கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்யுமாறு அகமதாபாத் நீதிமன்றத்தில் இந்து அமைப்புகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவர்களின் மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதி மன்ற நீதிபதிகள் கோயில்களை இடிக்கும் உத்தரவை இரத்து செய்தனர். அந்த இரத்து உத்தரவை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள பல்வேறு அமைப்புகள்...

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலக முற்றுகைப்போராட்டம்! 26042016

இன்று (26.04.2016) முற்றுகைப்போராட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழக அரசே ! உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை அகற்று எனும் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் ! நாள் : 26.04.2016 செவ்வாய்க்கிழமை,மாலை 4 மணி. இடம் : சென்னை மாநகராட்சி அலுவலகம்.ரிப்பன் மாளிகை. தலைமை : தோழர் விடுதலை ராஜேந்திரன்,பொதுச்செயலாளர் ,திராவிடர் விடுதலைக் கழகம். தொடர்புக்கு : 7299230363 சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று ! உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே !