Tagged: கோட்சே

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

‘விடியல்’ ஜனவரி மாத இதழில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. ஜனவரி 30, காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாள். அந்த நாளை நியாயமாக இந்துத்துவா எதிர்ப்பு நாள் என்று அறிவித்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், தீண்டாமை எதிர்ப்புக்கு அரசு ஊழியர்கள் உறுதி ஏற்கும் நாளாக அது குறுக்கப்பட்டது. பார்ப்பனியத்தின் திட்டமிட்ட ஒரு சதி தான். இந்திய வரலாற்றில் காந்தியின் ஆளுமை பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவருடன் உடன்படுகிற முரண் படுகிற கருத்துகள்; அவரை உறுதியாக ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் இருவருக் குமே உண்டு. தவறான புரிதல்களில் அவ்வப் போது குழப்பமான கருத்துகளை வெளிப் படுத்தியவர்தான் காந்தி. ஆனால் அதற்கு உள்நோக்கம் அவரிடம் ஏதும் இல்லை என்றுதான் மதிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தியாவை இந்துக்களின் இராஷ்டிர மாக்குவதே – சித்பவன் பாப்பனரான திலகர் கேட்ட சுயராஜ்யம். திலகர் காலத்துக்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை காந்தியிடம் வருகிறது. காந்தி தனது சுதந்திரப் போராட்...

கோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா?

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.  என்று ராகுல் காந்தி பேசியதற்காக கொதித்தெழுந்து நீதிமன்றம் போனார்கள். ஆனால் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை இவர்களால் மறுக்க முடியுமா? பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பா.ஜ.க. தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம்  கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993...

1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

காந்தி, கோட்சே எனும் ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட வுடன், இந்திய அரசால் ஆர்.எஸ் .எஸ் . தடை செய்யப்பட்டது. தடையை நீக்க, ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனர்கள், நேரு, பட்டேலுடன் பேரம் பேசினார்கள். இந்திய அரசு பல நிபந் தனைகளை முன் வைத்தது. ஆர்.எஸ் .எஸ் . ஒரு ரகசிய அமைப்பாக செயல்படக் கூடாது; அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதெல்லாம் விதிக்கப்பட்ட நிபந்தனை. அந்த நிபந்தனையை ஆர்.எஸ் .எஸ் . ஏற்றுக் கெண்டு தனது அமைப்புக்கு சட்ட திட்டங்களை உருவாக்கியதோடு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுவதுமாக விலகி நிற்கும் என்றும், (ஆர்.எஸ் .எஸ் . ஸின் சட்ட திட்டப் பிரிவு 4(பி)) உறுதியளித்தது. அரசியலில் ஒதுங்கியிருப்பதாக உறுதி கூறிய அதே ஆர்.எஸ் .எஸ் . தான் இப்போது பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தி யிருக்கிறது. இந்த விவரங்களை...