Tagged: கொடியேற்றம்

திருப்பூரில் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா !

திருப்பூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் 20 இடங்களில் கொடியேற்று விழாவாக நடைபெற்றது. 04.10.2015 அன்று காலை 10 மணிக்கு திருப்பூர் ராயபுரத்தில் துவங்கிய இருசக்கர வாகன ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அவர்கள் தலைமை தாங்கினார்.மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.ஊர்வலத்தின் துவக்க உரையை தோழர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் நிகழ்தினார்.பறையிசை முழங்க ராயபுரம் பகுதி கழக கொடியை மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் அவர்கள் ஏற்றிவைத்தார். வாகன ஊர்வலம் திருப்பூரின் முக்கிய சாலைகளின் வழியாக இரயில் நிலையம்,மாஸ்கோ நகர்,கன்னகி நகர், கொங்கனகிரி, பாலமுருகன் வீதி,திருவள்ளுவர் நகர்,ஜீவா நகர், ரங்கனாதபுரம், சாமுண்டி புரம், பெரியார் காலணி, அம்மாபாளையம், ஆத்துப்பாளையம்,போயம்பாளையம்,புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சந்தைப் பேட்டை, இடுவம் பாளையம், முருகம்பாளையம்,வீரபாண்டி பிரிவு ஆகிய இடங்களில்...