Tagged: கூடுவாஞ்சேரி திவிக

பெரியார் பிறந்தநாள் விழா – காஞ்சிபுரம் மாவட்டம்

தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேஷ்குமார், அமைப்பாளர் தெள்ளமிழ்து மற்றும் திராவிட விடுதலைக் கழக தோழர்கள், தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை விளக்கி பேருந்து நிலையம், அங்காடிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கை படித்து தோழர்களிடம் விளக்கம் கேட்டனர். பின்பு மாலை தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் பேரணியில் கலந்துகொண்டனர்.