கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்
சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...