Tagged: குண்டர் சட்டம்

கழகத் தோழர் பாரூக் விடுதலை !

கழக தோழர் முகமது பாரூக் அவர்கள் மீது புனையப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரை குழு (Advisory board) 30.11.2016 அன்று தள்ளுபடி செய்து பிறப்பித்துள்ள ஆணை ! குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட கழக தோழர் பாரூக் அவர்கள் இன்று 07.12.2016 சேலம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தோழருக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கறுப்பாடை அணிவித்து வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,சேலம் மாவட்ட செயலாளர் தோழர் சேலம் டேவிட்,கோவை மாவட்ட அமைப்பாளர் நேருதாஸ்,சூலூர் பன்னீர் செல்வம்,நங்கவள்ளி கிருஷ்ணன் உள்ளிட்ட கழக தோழர்கள் நிர்வாகிகள் தோழர் பாரூக் அவர்களுக்கு சேலம் சிறைவாயிலில் வரவேற்பளித்தனர்.

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கழகத் தோழர் பாரூக் மீதான குண்டர் சட்டம்: அறிவுரைக் குழுமம் இரத்து செய்தது

கோவையில் 22.9.2016 அன்று இந்து முன்னணி மாவட்ட செய்தி தொடர்பாளர் டி.சசிக்குமார் என்பவர் அடையாளம் தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை யொட்டி கோவை நகர் முழுதும் கலவரம், தீ வைப்பு, உடைமைகளை அழிப்பது என இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டார்கள். இதற்காக தமிழகம் முழுதுமிருந்தும்  ஆட்கள் அழைக்கப்பட்டனர். காவல்துறை கைகட்டி வேடிக்கைப் பார்த்தது. அப்போது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகச் செயலாளர் பாரூக், குழந்தைக்கு பால் வாங்க வந்தபோது கலவரக்காரர்கள் சூறையாடல் நிகழ்ந்து கொண்டிருந்தது. காவல்துறை ‘இந்து அமைப்பைச் சார்ந்த சிலரையும், இ°லாமியர்கள் சிலரையும் கணக்கு காட்ட கைது  செய்தது. அதில் பால் வாங்க வநத தோழர் பாரூக்கையும் கைது செய்து பின்பு அவர் மீது குண்டர் சட்டத்தையும் ஏவியது. அதைத் தொடர்ந்து குண்டர் சட்ட விதிமுறை யின் கீழ் நவம்பர் 8ஆம் தேதி சென்னையிலுள்ள அறிவுரை குழுமத்தின் முன்பு பாரூக் நேர் நிறுத்தப் பட்டார். குண்டர் சட்டத்தில்...

பூணூல் அறுப்பு வழக்கு: தோழர்கள் பிணையில் விடுதலை

சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக கூறி, 20.04.2015 அன்று இராவணன், கோபி, திவாகர், நந்தகுமார், பிரதீப், பிரபாகரன் ஆகிய 6 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். 8.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற தோழர்களின் பிணை கோரும் வழக்கில் தோழர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து 9.10.2015 காலை தோழர்கள் வேலூர் சிறையிலிருந்து விடுதலையான தோழர்களுக்கு இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சிறைச் சென்ற தோழர்கள் இராயப்பேட்டை பெரியார் சிலைக்கும் மயிலாப்பூர் அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தனர். தபசி குமரன், அன்பு தனசேகரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தென் சென்னை மாவட்ட தலைவர் வேழவேந்தன், கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை அருண், மாக்ஸ், நெப்போலியன், விடுதலை சிறுத்தைகள்...