Tagged: கால்டுவெல்

சமஸ்கிருத திணிப்பு துண்டறிக்கைக்கான செய்திகள்

மத்திய அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 08.07.2016 அன்று மாவட்ட தலை நகரில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கான துண்டறிக்கை வாசகங்கள். ———————————————————- மத்திய அரசே ! சமஸ்கிருதத்தை திணிக்காதே ! அலுவல் மொழிகள் பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கு ! • மத்திய மனித வளத் துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய் .அய் .டி.களிலும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது. • சமஸ்கிருதம் வழியாக இந்து, பார்ப்பனப்பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். • அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ்.சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாகஅறிவித்திருக்கிறது. • ஆர்.எஸ்.எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. • இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. • அது பேச்சு மொழியாகவும்...

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

தலையங்கம் : கால்டுவெல் தந்த கருத்தியல் (1814-2014)

1814ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டில் பிறந்த இராபர்ட் கால்டுவெல், 200 ஆம் ஆண்டுகளில் நினைவு கூரப்படுகிறார். மதம் பரப்புவதற்குத்தான் அவர் இந்தியா வந்தார். ஆனால், அவரது தொண்டு திராவிட மொழிகளின் ஆய்வுகளை நோக்கித் திரும்பியது. ‘திராவிடம்’, ‘திராவிட இயல்’ என்ற கருத்தியலை தனது ஆய்வு மூலம் நிறுவிக் காட்டிய பெருமைக்குரியவர் கால்டுவெல்! கால்டுவெல்லுக்கு முன்பு பிரிட்டிஷ் புலமையாளர்கள் பலரும் ‘இந்தியா’ எனும் நிலப் பகுதி மக்கள், ‘இந்தோ-ஆரிய’ மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் பேசப்படும் அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்தே உருவானவை என்றும் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். வில்லியம் ஜோன்ஸ், ஹீம் போல்ட் போன்ற “புலமையாளர்கள்” சமஸ்கிருதத்தையும், அதன் பார்ப்பன பண்பாட்டையும் உயர்த்திப் பிடித்தனர். ஆரியப் பார்ப்பனர்கள், அய்ரோப்பிய பண்பாட்டுடன் தங்களை இணைத்து பெருமை பாராட்டிய காலத்தில், கால்டுவெல் முன் வைத்த ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண ஆய்வு’ – ஆரிய மொழிக் குடும்பம் வேறு, திராவிட மொழிக் குடும்பம் வேறு...