அறிவார்ந்த காதலை வரவேற்போம்
“ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்து கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? குடி காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால்தானே தெரியும்? திடீரெனறு ஒருவரை ஒருவர் முடிச்சுப் போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழக வேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.” – பெரியார் (‘விடுதலை’ 24.5.1947) விடலைப் பருவ உணர்ச்சிக் காதல் – வாழ்க்கைக்குப் பயன் சேர்க்காது. அறிவார்ந்த சாதிகளைக் கடந்த புரிந்துணர்வு காதலை வரவேற்போம். அறிவியலுக்கு எதிரான ‘சோதிடப் பொருத்தம்’ வாழ்க்கைப் பயணத்தில் ஒற்றுமையை உருவாக்கி விடாது என்பதற்கு குடும்பநல நீதிமன்றங்களில் குவியும் விவாக ரத்து வழக்குகளே சான்று; அத்தனை திருமணங்களும் நாள்...