Tagged: காணிக்கை

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம்...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நாய் வளர்த்தால் குடும்பப் பிரச்சினை வராது; அது குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தருகிறது.  – அமைச்சர் ஜெய்பால் அரசு விழாவில் பேச்சு நல்ல யோசனை. அப்படியே அம்மா விடம் சொல்லி விலை இல்லா நாய் வழங்கும் திட்டத்தை அறிவிக்கச் சொல்லுங்க. தேர்தலில் குடும்பம் குடும்பமா மகிழ்ச்சியா வாக்களிப் பாங்க! மும்பையில் ஏழுமலையான் கோயில் கிளையை கட்ட – மகாராஷ்டிரா அரசிடம் நிலம் வாங்க தேவஸ்தானம் முடிவு. – செய்தி அரசிடம் நிலம் வாங்கிடுவீங்க! ஏழுமலையானை யாரிடமிருந்து வாங்கப் போறீங்க? முடிகொட்டும் புற்று நோயாளிகளுக்கு ‘விக்’ தயாரிச்சு சென்னை கல்லூரி மாணவிகள் தங்கள் தலையை மொட்டைப் போட்டு முடிக் கொடை வழங்கினார்கள்.       – செய்தி “காணிக்கை”யை, “கொடை”யாக மாற்றிய சகோதரிகளே! நீங்களே அழகானவர்கள்! கெஜ்ரிவால் ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற வேண்டும்; சென்னையில் ஆம் ஆத்மி கட்சி அலு வலகம் முன் காங்கிரஸ் போராட்டம். – செய்தி ஒரு சந்தேகம்! இதுக்குப் போராட வேண்டிய இடம் காங்கிரஸ்...