Tagged: காட்டாறு

‘காட்டாறு’ இதழ் குழு: ஒரு முக்கிய அறிவிப்பு

‘காட்டாறு’ மாத இதழ் கழகத்தின் அதிகாரபூர்வமானது அல்ல என்று ஏற்கெனவே அறிவித்துள்ளோம். அந்த இதழோடு தொடர்புடைய தோழர்கள் பொள்ளாச்சி விஜயராகவன், தாமரைக் கண்ணன், இராவணன், பல்லடம் விஜயன் – கழகத்தின் பொறுப்புகளிலிருந்து விலகிக் கொள்வதாகவும், ஆனால், கழகத்தில் உறுப்பினர்களாக தொடர்வதாகவும் எழுத்து மூலம் தலைமைக்கு தெரிவித்திருந்தனர். ஆனால், கழகத்தின் செயல் திட்டங்களில் இணைத்துக் கொள்ளாமல் அவற்றை விமர்சித்து, தங்களுக்கான தனி செயல் திட்டங்களோடு செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கழக உறுப்பினர்களாக நீடிப்பதிலிருந்தும் அவர்களாகவே விலகிக் கொண்டிருக்க வேண்டும். அப்படி விலகிக் கொள்ளாமல், கழக உறுப்பினர்கள் என்று கூறிக் கொண்டே கழக செயல் திட்டங்களோடு முரண்பட்டு செயல்படுவது அமைப்பில் குழப்பங்களை உருவாக்கும் முயற்சிகளேயாகும். கழக செயலவை யிலும் தோழர்கள் பலரும் இதை சுட்டிக் காட்டினர். எனவே, ‘காட்டாறு’ இதழோடு தங்களை நேரடியாக இணைத்துக் கொண்டு தங்களுக்கான தனித்த செயல் திடடங்களோடு செயல்படும் தோழர்கள் திராவிடர் விடுதலை கழகத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்து நீடிக்க...

காட்டாறு செய்திக்கு மறுப்பு

காட்டாறு செய்திக்கு மறுப்பு

//அடுத்த தலைமுறைக்கு அறிவாயுதம்’ என்ற அறிவிப்பை நாம் வெளியிட்ட நேரத்தில்,திராவிடர் விடுதலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dvkperiyar.comஎன்ற தளத்திலும் பணிகள் தொடங்கிவிட்டன. அதில் 1925 முதல் 1938 வரை குடி அரசு,பகுத்தறிவு, புரட்சி, ஏடுகளில் வெளியான ஏறத்தாழ 2631 கட்டுரைகள் யூனிகோட் மற்றும் பி.டி.எஃப் வடிவங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தைப் பாராட்டுகிறோம்// http://www.suyamariyathai.org/indexnews.php?nid=213 இது குறித்து சில வார்த்தைகள் இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின் எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு, பெரியாரின் எழுத்துக்களையும் பேச்சுகளையும் தொகுத்து 1925 முதல் 1938 வரை 27 தொகுதிகளாகவும், 1930ல் பெரியாரால் வெளியிடப்பட்ட ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை ஒரு தொகுதியாகவும் தொகுத்து திராவிடர் கழகத்தின் வழக்குகளால் 1.5 ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கி கிடந்து உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளை பெற்று 2007ல் வெளியிட்ட அன்றே அனைத்து தொகுப்புகளையும் அப்போதைய பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளமான periyardk.org பதிவேற்றம் செய்யப்பட்டது. ஓரிரு மாதங்களில் யூனிகோடாகவும்...