ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி
‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக்கு குடும்பத்தினரே பெண்களை கொலை செய்யும் அளவுக்கு ஜாதியம் வெறி பிடித்து நிற்கிறது. இந்தக் கொலைகளையும் இந்தக் கொலைகளை தண்டனையாக அறிவிக்கும் ஜாதி பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலிமையடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசே கடுமையான ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு செவிமெடுக்கவில்லை. மோடி ஆட்சி இதற்கு ஒரு தனி சட்டம் இயற்ற முன் வந்து அதற்கான மசோதாவை மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அனுப்பியது. ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த மசோதா குறித்து கருத்துகளைத் தெரிவித்து விட்டன. தமிழ்நாடு அரசோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 98 பேர் – இப்படி ‘கவுரவ’க் கொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இப்போது மீண்டும் இதேபோல் ஒரு கொலை நடந்திருக்கும் அதிர்ச்சியான செய்தி வெளி வந்திருக்கிறது. இராமநாதபுரம் வட்டம் புத்தேந்தல்...