Tagged: ஈழ விடுதலை

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...

இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும் – மலேசியாவில் கழக தலைவர் உரை நிகழ்த்துகிறார் !

மலேசியாவிலுள்ள பினாங்கு மாநிலத்தில் இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச மனித உரிமைகள் கழகத்தின் ‘இலங்கை மீதான போர் குற்ற அறிக்கையும் அதன் பிந்தைய நிலையும்’ எனும் கருத்தரங்கில் பேசுகிறார். 21.11.2015 சனிக்கிழமை மாலை 03.30 மணிக்கு நடைபெறும் ”இலங்கையில் வாழும் தமிழர்களின் எதிர்காலம் ” எனும் நான்காம் அமர்வில் ”ஈழம் தீர்வா?” எனும் தலைப்பில் கழக தலைவர் உரையாற்றுகிறார். இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களும்,இலங்கை வடக்கு மாகாண அவை உறுப்பினர் ஆனந்தி சரீதரன் அவர்களும் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் திரு ராமசாமி அவர்களும் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகிறார்கள்.