‘இராம லீலா’வுக்கு எதிரான அசுரர்களின் கலகக் குரல்!
அறிவியல் ரீதியிலான ஆய்வுகளே இல்லாத காலத்திலேயே பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அரசியல் உள்ளடக்கத்தை வழங்கியவர் பெரியார். பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ‘தேவ-அசுர’ப் பேராட்டத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான ‘அசுர மரபு’ இன்னும் உயிர்த் துடிப்போடு பழங்குடி மக்களிடம் இருப்பதையும், பார்ப்பன மரபுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் நடத்திய மக்கள் இயக்கங்களையும் வரலாற்று பின்புலத்தோடு, படம் பிடிக்கிறது இக்கட்டுரை. அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மை யிலும் சிறுபான்மையினரான அசுர் பழங்குடியினத்த வரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம் மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாகக் கருதிக் கொள்கின்றனர். அங்கே மகிஷாகர், அசுர்களின் மூதாதையர்., மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்த வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக் குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின்...