Tagged: இரங்கல்

சாவிலும் சடங்குகளை தவிர்க்கச் சொன்ன தோழர்

11 .6.16 அன்று சென்னை மாவட்ட கழகத் தோழர் ஆட்டோ சரவணன் முதலாமாண்டு நிகழ்ச்சி இராயப்பேட்டை பத்ரிநாராயணன் படிப்பகத்தில் கழகப் பொதுச்செயலாளர்விடுதலை இராசேந்திரன் படத்திற்கு மாலை அணிவித்து இரங்கல் உரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்ட இந்நிகழ்வில் கழகத்தோழர்கள் திரளாக கலந்து வீர வணக்கம் செலுத்தினர். “மரணத்திலும் சடங்குகளை மறுக்கச்சொன்ன பெரியார் தொண்டர் சரவணனுக்கு வீர வணக்கம்!” என்ற வாசகங்களடங்கிய சுவரொட்டியை கழகத் தோழர்கள் ஒட்டியிருந்தனர். -புரட்சிப் பெரியார் முழக்கம் – 16.06.2016.

குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் முடிவெய்தினார் !

01.06.2016 அன்று மாலை 5 மணியளவில் உடல்நலக்குறைவினால் தோழர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்கள் முடிவெய்தினார்.இன்று 02.06.2016 மாலை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற உள்ள இறுதி நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மிகச்சிறந்த பெரியாரியல்வாதி, திராவிடர் கழக இளைஞர் அணி தலைவராக பணியாற்றி ஏராளமான இளைஞர்களை அமைப்பிற்கு அழைத்து வந்தவர், 1974 இந்தியாவே திரும்பிப்பார்த்த அன்னை மணியம்மையார் நடத்திய ராவணலீலா நிகழ்வில் முன்னின்று செயல்பட்டவர்,அதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மகத்தான அற்பணிப்புகளை செய்தவர், ஈழவிடுதலை போராளிகளுக்கு தன்னுடைய சொத்துக்களை வழங்கியவர், பெருமளவு நிதி உதவி செய்தவர், திராவிடர் விடுதலைக் கழக ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் ஏட்டை குடந்தை மற்றும் சுற்றுப்பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்களில் எல்லாம் கொண்டு போய் சேர்த்தவர், தமிழ்நாடு இந்திய தேசியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்கிற...

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

பன்னீர்செல்வமே! காலம் சென்று விட்டாயா? : பெரியார் (பன்னீர்செல்வம் முடிவுக்கு எழுதிய இரங்கல்)

நமது உண்மைத் தோழரும், உற்ற துணைவரும், உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும், தமிழர் இயக்கத்தில் உறுதியான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங்கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும், நினைத்தால் திடுக்கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை உண்டாக்கிக் கொண்டிருந்தவருமான அருமை பன்னீர் செல்வம் அவர்களை, இன்று, காலம் சென்ற பன்னீர் செல்வம் என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது! நெஞ்சு திக்கு திக்கென்று அடித்துக் கொள்கிறது! மெய் நடுங்குகிறது! எழுதக் கையோடவில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக்களை அழிக்கிறது! பன்னீர்செல்வத்திற்குப் பாழும் உத்தி யோகம் வந்ததும் போதும்; அது அவரது உயிருக்கே உலையாய் இருந்ததும் போதும்! தமிழர்களைப் பரிதவிக்கவிட்டுவிட்டு மறைந்து விட்டார். இந்த உத்தியோகம் ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல் – யார், யார் என்று மனம் ஏங்குகிறது; தேடுகிறது; தேடித் தேடி ஏமாற்றமடைகிறது! என் மனைவி முடிவெய்தியபோதும் நான் சிறிதும்...