குடந்தை ஆ.பி.எஸ்.ஸ்டாலின் முடிவெய்தினார் !

01.06.2016 அன்று மாலை 5 மணியளவில் உடல்நலக்குறைவினால் தோழர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்கள் முடிவெய்தினார்.இன்று 02.06.2016 மாலை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற உள்ள இறுதி நிகழ்வில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

மிகச்சிறந்த பெரியாரியல்வாதி,

திராவிடர் கழக இளைஞர் அணி தலைவராக பணியாற்றி ஏராளமான இளைஞர்களை அமைப்பிற்கு அழைத்து வந்தவர்,

1974 இந்தியாவே திரும்பிப்பார்த்த அன்னை மணியம்மையார் நடத்திய ராவணலீலா நிகழ்வில் முன்னின்று செயல்பட்டவர்,அதற்காக அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மகத்தான அற்பணிப்புகளை செய்தவர்,

ஈழவிடுதலை போராளிகளுக்கு தன்னுடைய சொத்துக்களை வழங்கியவர், பெருமளவு நிதி உதவி செய்தவர்,

திராவிடர் விடுதலைக் கழக ஏடான புரட்சிப்பெரியார் முழக்கம் ஏட்டை குடந்தை மற்றும் சுற்றுப்பகுதிகளில் முடிதிருத்தும் நிலையங்களில் எல்லாம் கொண்டு போய் சேர்த்தவர்,

தமிழ்நாடு இந்திய தேசியத்தில் இருந்து விடுபட வேண்டும் என்கிற விடுதலைக் கனலோடு வாழ்ந்தவர்,

இப்போது பலரால் உரிமை கோரப்படும்,குடிதாங்கி ஜாதிக் கலவரத்தில் சிக்கலை சுமுகமாக தீர்க்க திருப்பனந்தாள் டி.எம்.மணி (உமர்பாரூக்) அவர்களுடன் இணைந்து களப்பணியாற்றியவர்,

கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண (நாயுடு) கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திராவிடர் கழக இளைஞர்களுக்காக நாகப்பட்டிணம் நீதிமன்றத்திலும்,சென்னை உயர் நீதி மன்றத்திலும் வழக்குகளை நடத்தி அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட காரணமாய் இருந்தவர்,

தோழரின் மறைவு பேரிழப்பே ஆகும்

ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை முன்னெடுத்த ஒப்பற்ற பெரியாரிய போராளி கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் இறுதி நிகழ்ச்சியில் ஆயிரகணக்கான மக்கள் அஞ்சலி !

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கும்பகோணம் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் (74) அவர்கள் உடல் நலக்குறைவால் 01.06.2016 அன்று முடிவெய்தினார்.

அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மறைந்த ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கழக தலைவர் கொளத்தூர் மணி, கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன், ஆகியோர் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் அவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு பாசறையில் பட்டை தீட்டப்பட்டவரும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் விடுதலைக்காக போராடிய மிகச்சிறந்த பெரியாரியல்வாதி அண்ணன் ஆர்.பி.எஸ். ஸ்டாலின் ஆவர்கள் பெரியார் இயக்கத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை கொண்டு வந்து சேர்த்தவர்.

1974ம் ஆண்டு இந்தியாவே திரும்பி பார்த்த அன்னை மணியம்மையார் தலைமையில் நடைபெற்ற ராவணலீலா நிகழ்ச்சியை முன்னிற்று நடத்தியவர். அதற்காக இந்திய அரசு அவர்மீது வழக்கும் தொடர்ந்தது-.

தமிழீழ விடுதலைக்கும் போராட்டத்திற்கும் பெரும் நிதியுதவி வழங்கி அதற்காக மகத்தான அர்பணிப்புகளை செய்தவர். கழகத்தின் வார ஏடான புரட்சி பெரியார் முழக்கத்தை தன் சொந்த செலவில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் எல்லாம் பரப்பியவர் தந்தைபெரியார் கூறிய தனித்தமிழ்நாடு உருவாவதற்கு பெரும் கனவுகளோடும், அதை உருவாக்குவதற்கு கனலோடும் வாழ்ந்தவர்.

கீழவெண்மணி கிராமத்தில் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை உயிரோடு கொளுத்திய கோபாலகிருஷ்ண நாயுடுவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெரியார் இயக்க தோழர்களுக்காக நாகப்பட்டினம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்காடி அவர்களின் விடுதலைப்பெற காரணமாக இருந்தவர்.

பெரியாரியல் பார்வையோடு ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கான ஓர் அரசியலை முன்னெடுத்த ஒரு ஒப்பற்ற பேராளியை சிறந்த சிந்தனாவாதியை நாம் இழந்திருப்பது. நமக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த திராவிடர் இயக்கத்திற்கே பேரிழப்பாகும்.
முன்னதாக ஆர்.பி-.எஸ்.ஸ்டாலின் அவர்கள் உடலுக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கோவை கு.ராமகிருஷ்ணன், அதன் நிர்வாகிகள் ரசீத்கான், பெரியார் செல்வம்,

திராவிடர் விடுதலைக்கழக மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு ரெத்தினசாமி, சூலூர் பன்னீர்செல்வம், தலைமைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா, நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேசு, மயிலாடுதுறை நகர கழக நிர்வாகிகள் செந்தில்குமார். ராஜராஜசோழன், தஞ்சை பசுகௌதமன், சாக்கோட்டை இளங்கோவன், நாச்சியார் கோயில் சோலை மாரியப்பன், திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு உள்ளிட்ட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

மறைந்த ஆர்.பி.எஸ். ஸ்டாலின் அவர்களின் துனைவியார் இந்திரா, மூத்த மகன் அருண் என்கிற சண்முகசுந்தரம், இளைய மகன் வழக்கறிஞர் விஜய்ஆனந்த் ஆகியோருக்கு கழக தலைவர் கொளத்தூர்மணி, கழக பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் ஆறுதல் கூறினர்.

– செய்தி மன்னை இரா.காளிதாசு

13322153_1753339924949900_5621665945817812746_n13331107_1753340154949877_6963070345420817198_n

 

You may also like...